முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி கொள்ளை அடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார் - பொன்னையன்

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      ஊழல்

 

தஞ்சை. பிப்.19

தமிழ் உணர்வில்லாத கருணாநிதி, கொள்ளை அடிப்பது மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்.

தஞ்சையில் நடந்த இலவச திருமண விழாவில் கழக அமைப்பு செயலாளர் பொன்னையன் பேசினார்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 63வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் 32 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. 

விழாவில் முன்னாள் அமைச்சர் கழக அமைப்பு செயலாளர் சி. பொன்னையன். கழக விவசாயப்பிரிவு தலைவர் தஞ்சை மாவட்ட பொறுப்பாளருமான துரை.கோவிந்தராஜன் நடத்தி வைத்தார். முன்னாள் அமைச்சர் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.எல்.ஏ வரவேற்று பேசினார். மணமக்களுக்கு தங்கத்தாலியை கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

மணமக்களுக்கு தங்கத்தாலி, பட்டு வேஷ்டி, பட்டு சட்டை, பட்டு புடவை, கிரைண்டர், காமாட்சி அம்மன் விளக்கு, குத்து விளக்கு, nullஜை தட்டு, குடம், தவலை, தாம்பாலம், அண்டா, தேக்சா, பாய், தலையனை, சமுக்காளம், பெட்சிட், சூட்கேஸ் உள்ளிட்ட 63 சீர்வரிசை பொருட்களே 32 ஜோடி மணமக்களுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சீர்வரிசைகளாக வழங்கப்பட்டது. 

விழாவில் கழக அமைப்பு செயலாளர் சி.பொன்னையன் பேசியதாவது,

 தஞ்சை அரசில் விழிப்புணர்வு மிக்க மாவட்டம். கடந்த காலங்களில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு புகழ்சேர்த்த மாவட்டம், தற்போது அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவிற்கும் புகழ் சேர்த்து வருகிறது. கட்சி நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும் முதல் நிகழ்ச்சியாக எடுத்து செய்யும் மாவட்டம் இந்த தஞ்சை மாவட்டம். எந்த மாவட்டத்திலும் நடக்காத நிகழ்ச்சியை தஞ்சை தெற்கு மாவட்டம் நடத்தியுள்ளனர். 

ஜெயலலிதாவின் உணர்வுகளை பட்டிதொட்டியெல்லாம் பரப்பி வருகிறார்கள். நான் அரசியல் படித்த, பட்க்க அடித்தளமிட்டது தஞ்சை மாவட்டம். இந்த இயக்கம் ஒரு குடும்பத்தை போன்றது. இந்த திருமணம் அதிமுக என்ற குடும்ப இயக்கத்தில் நடைபெறும் திருமணம். இந்த மணமக்கள் நீடூழி பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என்று கழக பொது செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து செய்தி அனுப்பு உள்ளார். பொது வாழ்வில் தூய்மை கடைபிடிக்க வேண்டும் என்று பெரியார் கூறினார். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று அண்ணா கூறினார். ஆனால் எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாதான் எளிமையின் உருவமாக திகழ்கிறார். தமிழ் சமுதாயத்திற்காக, தமிழ் மக்களுக்காக தினமும் 18 மணி நேரம் அயராது உழைக்கிறார். 

ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளது என்று முதலில் ஜெயலலிதாதான் கூறினார். திமுக விஞ்ஞான ரீதியில் ஊழல் புரிந்து உள்ளது . கருணாநிதிக்கு தமிழ் உணர்வு கிடையாது. கொள்ளை அடிப்பது மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார். போலி கம்பெனிகள் கோடி கோடியாக கொள்ளை அடித்ததை பிரதமரும் நியாயப்படுத்தி உள்ளார். இலங்கையில் எம்.ஜி.ஆருக்கு சிலை வைத்தனர். கருணாநிதிக்கு சிலை வைத்தனர். ஆனால் அவற்றை உடைத்து விட்டனர். இதை பொறுக்க முடியாததால்தான் இலங்கை தமிழர் படுகொலைக்கு கருணாநிதி துணை போனார். திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு விண்ணை முட்டியுள்ளது. அரிசி பருப்பு வலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

அதிமுக ஆட்சியில் அரிசி பருப்பு விலை கட்டுக்கோப்பாக இருந்தது. அதிமுக ஆட்சியில் பதுக்கல்காரர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஆனால் திமுக ஆட்சியில் பதுக்கல்காரர்கள் கருணாநிதியின் பங்காளிகளாக உள்ளனர். இந்த மணமக்கள் எல்லா நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட தலைவர் டி.மெய்க்கப்பன், மாவட்ட துணை செயலாளர்கள் சாவித்ரி கோபால், பொன் முத்துவேல், தொகுதி கழக செயலாளர்கள் தஞ்சை துரை.திருஞானம், பட்டுக்கோட்டை பி.என். ராமச்சந்திரன், திருவையாறு எம்.ஜி.எம்.சுப்பிரமணியம், ஒரத்தநாடு கோ.தேவதாஸ், பேராவூரணி மா.கோவிந்தராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.ராஜேந்திரன், கே.பஞ்சவர்ணம், மாவட்ட பிரிவு செயலாளர்கள் ஆர்.காந்தி, மாணவர் அணி அமுதா ரவிச்சந்திரன், மகளிர் அணி சாமி தவிடன், இலக்கிய அணி வி.புண்ணியமூர்த்தி, அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி ராஜேஸ்வரன், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மலைஅய்யன், எம்.ஜி.ஆர் மன்றம் ஒன்றிய நகர கழக செயலாளர்கள் துரை.வீரணன், வி.சூரியமூர்த்தி, செந்தில், சுப்பிரமணியன்,வி.கே.டி.பாரதி, நகர செயலாளர்கள் சத்தியமூர்த்தி,  துரைமாணிக்கம், சுந்தர்ராஜன், பொதுக்கு உறுப்பினர்கள் கவிதா கலியமூர்த்தி, பேரூர் கழக செயலாளர்கள் த.செல்வம், துரை.சேகர், ஏ.பிச்சை மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர்,  ஊராட்சி கிளைக்கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

முடிவில் தஞ்சை நகர கழக செயலாளர் வி.பண்டரிநாதன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்