முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜிம்பாப்வே 161 ரன் வித்தியாசத்தில் கென்ய அணியை வீழ்த்தியது

திங்கட்கிழமை, 21 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

கொல்கத்தா,மார்ச். - 21 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவில் நடந்த லீக் ஆட்டத்தில், ஜிம்பாப்வே அணி 161 ரன் வித்தியாசத்தில் கென்ய அணியை வீழ்த்தியது. இது அந்த அணிக்கு ஆறுதல் வெற்றியாக அமைந்தது. இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே அணி தரப்பில், கீப்பர் டைபு, சிபா  ண்டா, மற்றும் எர்வின் ஆகியோர் அரை சதம் அடித்து அணி கெளரவ மான ஸ்கோரை எடுக்க உதவினர். டெய்லர் மற்றும் சிகும்புரா ஆகி யோர் அவர்களுக்கு பக்கபலமாக ஆடினர்.  பின்பு பெளலிங்கின் போது, பிரைஸ், லேம்ப் மற்றும் கிரமர் ஆகி யோர் நன்கு பந்து வீசி கென்ய அணியின் ரன் குவிப்பை கட்டுப் படுத் தினர். போபு மற்றும் உத்செயா இருவரும் அவர்களுக்கு பக்கபலமாக பந்து வீசினர். 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 41 - வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் ஏ குரூப்பைச் சேர்ந்த ஜிம்பாப்வே மற்றும் கென்ய அணிகள் மோதின. 

முன்னதாக பேட்டிங்கை தேர்வு செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக் கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 308 ரன்னை எடுத்தது. அந் த அணி சார்பில் 3 வீரர்கள் அரை சதமும், 2 வீரர்கள் கால் சதமும் அடி த்தனர். 

அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான எர்வின் அதிகபட்ச மாக, 54 பந்தில் 66 ரன்னை எடுத்தார். இதில் 9 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் ஒடினோ வீசிய பந்தில் கிளீன் போ  ல்டானார். 

சிபாண்டா 57 பந்தில் 61 ரன்னை எடுத்தார். இதில் 7 பவுண்டரி மற்று ம் 1 சிக்சர் அடக்கம். கீப்பர் டைபு 74 பந்தில் 53 ரன்னை எடுத்தார். தவி ர, துவக்க வீரர் டெய்லர் 36 பந்தில் 26 ரன்னையும், கேப்டன் சிகும்பு ரா 41 பந்தில் 38 ரன்னையும் எடுத்தனர். 

கென்ய அணி தரப்பில் ஒடினோ 61 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, அன்கொன்டோ, ஒதியாம்போ, மற்றும் நாச்சே ஆகி யோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

கென்ய அணி 309 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை ஜிம்பாப்வே அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங் கிய அந்த அணி 36 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 147 ரன்னை எடுத்தது. 

இதனால் ஜிம்பாப்வே அணி இந்த கடைசி லீக்கில் 161 ரன் வித்தியாச த்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 ஆறுதல் புள்ளிகள் கிடைத்தது. 

கென்ய அணி தரப்பில், ஒரு வீரர் கூட அரை சதத்தை தாண்டவில்லை. ஒதியாம்போ அதிகபட்சமாக, 47  பந்தில் 44 ரன்னை எடுத்தார். படே ல் 27 பந்தில் 24 ரன்னையும், ஒபாண்டா 36 பந்தில் 23 ரன்னையும், ஒடாயோ 29 பந்தில் 14 ரன்னையும், எடுத்தனர். 

ஜிம்பாப்வே அணி தரப்பில் பிரைஸ் 20 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். லேம்ப் 21 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். கிரேமர் 28 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக எர்வின் தேர்வு செய்யப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்