முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயல் பணி ஒப்படைப்புக்கு வரிசலுகை கிடையாது - ஒபாமா

ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், பிப். - 20 - அயல் பணி ஒப்படைப்பில் தொடர்ந்து ஈடுபட்டால் வரிச்சலுகையே கிடையாது என்று அமெரிக்க நிறுவனங்களை எச்சரித்துள்ளார் ஒபாமா.  வாஷிங்டன் அருகில் எவரெட் என்ற இடத்தில் உள்ள போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து நாட்டு மக்களிடையே வானொலி மூலம் பேசிய அவர் மேலும் கூறுகையில், அமெரிக்க தொழில் நிறுவனங்கள் உற்பத்தியில் மீண்டும் ஈடுபட வேண்டும். அதன் மூலம் லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். இதை நிறைவேற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அரசு வரி சலுகையையும் பிற சலுகைகளையும் அளிக்கும். வெறும் லாபம் கருதி அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை மறுத்து வெளிநாடுகளுக்கு அயல்பணி ஒப்படைப்பு மூலம் வேலைவாய்ப்பையும் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு வரி விலக்கு, குறைந்த வட்டியில் நீண்ட கால கடன், ஏற்றுமதி மானியம் போன்ற எந்த சலுகையும் தரப்பட மாட்டாது.  அமெரிக்கர்கள் கடினமாக வேலை செய்யக் கூடியவர்கள். சிறந்த தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறவர்கள். நேர்மையாக நடப்பவர்கள். தேசத்துக்காக பொறுப்புகளை மனமுவந்து ஏற்பவர்கள். எனவே இந்த லட்சியங்கள் தொடர அமெரிக்க தொழில் நிறுவனங்களும் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். போயிங் விமான நிறுவனம் உங்களுக்கு எல்லாம் நல்ல உதாரணம். விமான தயாரிப்பில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு இந்த நிறுவனம் வேலைவாய்ப்பை அளிக்கிறது. அமெரிக்காவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு இங்கே வேலைவாய்ப்பு தரப்படுகிறது. அமெரிக்க தொழில் நிறுவனங்கள் நீண்ட காலத்துக்கு பிறகு உற்பத்தியை முழுவீச்சில் தொடங்கியுள்ளன. அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்