எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, பிப்.24 - `தானே' புயல் நிவாரண நிதிக்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் நேற்று மட்டும் 2 கோடியே 61 லட்சத்து 71 ஆயிரத்து 1 ரூபாய் நிதி அளிக்கப்பட்டது. இதுவரை ரூ.114.84 கோடி குவிந்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தமிழகத்தை தாக்கிய தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நேற்று (23.2.2012) தலைமைச் செயலகத்தில் கீழ்க்கண்டவர்கள் நிதியுதவி வழங்கினார்கள்.
கோயம்புத்தூர், லஷ்மி மிஷின் ஓர்க்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு 1 கோடி ரூபாய். மெட்ராஸ் சிமெண்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பி. ராமசுப்பிரமணிய ராஜா 1 கோடி ரூபாய். சென்னை, சமுதாய பவுண்டெஷன் நிர்வாக அறங்காவலரும், கர்நாடக இசைக்கலைஞருமான சுதா ரகுநாதன் 5 லட்சம் ரூபாய். இந்திய தொழிற்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சார்பாக அதன் தமிழ்நாடு மாநில மன்றத்தின் தலைவர் என்.கே. ரங்கநாத் 31 லட்சத்து 71 ஆயிரத்து 1 ரூபாய்.
கோயம்புத்தூர், சி.ஆர்.ஜி குழுமத்தின் சார்பாக அதன் நிறுவனர் மற்றும் அறங்காவலர் டாக்டர் ஆர். நந்தினி 25 லட்சம் ரூபாய்.
தமிழக முதலமைச்சரிடம் தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக 2 கோடியே 61 லட்சத்து 71 ஆயிரத்து 1 ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நேற்று மட்டும் (23.2.2012) அளிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை 114 கோடியே 84 லட்சத்து 21 ஆயிரத்து 776 ரூபாயாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |