முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் ஆட்சியர் உட்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

வெள்ளிக்கிழமை, 24 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.24 - திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக பணியாற்றும் கே.நாகராஜன், சென்னை மாநகராட்சியில் துணை ஆணையராக (நிதி மற்றும் வருவாய்) உள்ள ஹனீஷ் சாப்ராவுக்குப்பதிலாக மாற்றப் பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சியில் துணை ஆணையராக (வருவாய் - நிதி) இருக்கும் ஹனீஷ் சாப்ரா ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளார். அவரது பணியில் நாகராஜன் பணியாற்றுவார்.

விழுப்புரம் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரியாக உள்ள என்.வெங்கடாசலம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப் பட்டுள்ளார்.

திருச்சி மாநகராட்சியில் ஆணையராகப் பணியாற்றும் வீரராகவராவ் கடலூர் மாவட்ட திட்ட மேலாண்மைப் பிரிவில், திட்ட அதிகாரி (தானே) யாகவும், கூடுதல் ஆட்சியராகவும் நியமிக்கப் பட்டுள்ளார். அவர் தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் மறு சீரமைப்புக்கான சிறப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவார். இந்த பணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துடன் இணைந்த பணியாகும்.

இதே போல் தஞ்சை மாவட்ட முன்னாள் ஆட்சியராக இருந்த சி.முனியநாதன், தமிழ்நாடு மீன்வளத்துறை மேலாண்மை இயக்குனராகப் பணியாற்றிய ராஜேந்திர பட்னாவுக்குப் பதிலாக நியமிக்கப் பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!