முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈ.சி.ஆர். சாலையில் பாலியல் தொழில்: மூன்று பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,பிப்.26 -கிழக்கு கடற்கரை சாலையில் பண்ணை வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த மூன்று பாலியல் புரோக்கர்களை காவல் துறையினர் கைது செய்து அத்தொழிலில் ஈடுபட உள்ள பெண்களையும் மீட்டனர். இண்டர்நெட் மூலம் மசாஜ் என்ற பெயரில் வாடிக்கையாளர்களை கவர்ந்து விபச்சார தொழில் செய்வதை தடுத்து நடவடிக்கை எடுக்கவும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் அப்பாவி இளம் பெண்களை மீட்கவும் சென்னை காவல் ஆணையாளர் ஜே.கே.திரிபாதி மற்றும் காவல் கூடுதல் ஆணையாளர் அபய் குமார்சிங் ஆணையின்படி சென்னை மத்திய குற்றப்பரிவு துணை ஆணையாளர் டாக்டர். எம். சுதாகர் ஆகியோர் அறிவுரைகளின்படி, சென்னை விபச்சார தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர் எம்.கிங்ஸ்லின் மேற்பார்வையில் ஆய்வாளர் எஸ்.சாண்டியாகோ தலைமையில் போலீஸ் பார்ட்டியினர் கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். 

சென்னை பனையூர் பகுதியில் இ.சி.ஆர்.சாலையில் cutz n glitz, aunisex n salon என்ற பெயரில் இணையதளத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட மசாஜ் செண்டரில் செல்போன் எண்ணிற்கு விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் போன் செய்து வாடிக்கையாளர் போல் பேச்சுக் கொடுத்தபோது மறுமுனையில் பேசிய நபர் நவீன முறையில் மசாஜ் செய்கிறோம், அதோடு தாங்கள் விருப்பப்பட்டால் அங்கு மசாஜ் செய்யும் வெளி மாநில அழகிகளில் ஒருவருடன் உல்லாசமாக இருக்க ரூ.10,000 செலவாகும் என்றும், குறிப்பிட்ட இடத்திற்கு பணத்துடன் வருமாறு கூறினார். டிப்-டாப் உடையில் சென்ற விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரை, வாடிக்கையாளர் என தவறாக நினைத்து இ.சி.ஆர்.ரோட்டில் கடற்கரை ஓரம் உள்ள ஒரு சொகுசு பங்களாவில் உள்ள மேற்படி மசாஜ் செண்டருக்கு அழைத்து சென்றனர். அவர்களை பின் தொடர்ந்து சென்ற விபச்சார தடுப்பு பிரவு ஆய்வாளர் மேற்படி இடத்தில் மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதை உறுதி செய்த பிறகு அதிரடியாக அங்கு புகுந்து விபச்சாரம் நடத்தி வந்த சீனிவாசன் (34), ராம்குமார் (36), மற்றும் சரவணன் (31) என்பவர்களை கைது செய்து அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்த வைத்திருந்த மும்பையை சேர்ந்த ஐந்து இளம் அழகிகளை மீட்டனர்.

போலீசாரின் விசாரனையில் சீனிவாசன் என்பவர் மேற்படி மசாஜ் - ஸ்பா செண்டரின் உரிமையாளர் என்பது தெரியவந்தது. மேற்படி சொகுசு பங்களாவை அவர் மாத வாடக்கைக்கு எடுத்து மசாஜ் என்ற பெயரில் வெளி மாநில அழகிகளை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்தது. கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி பங்களாவின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளதாக தெரியவந்தது. வாடிக்கையாளர்கள் மனம் கவரும் வகையில் மிகவும் ஆடம்பரமான முறையில், உள் அலங்காரத்துடன் உல்லாசமாக இருக்க அந்த பண்ணை வீட்டை விபச்சாரத்திற்கு பயன்படுத்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago