முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் போராட்டம் நடத்த சமாஜ்வாடி திட்டம்

செவ்வாய்க்கிழமை, 22 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, மார்ச் 22 - உத்தர பிரதேசத்தில் அம்மாநில அரசை கண்டித்து வருகிற 25-ம் தேதி மீண்டும் போராட்டம் நடத்த சமாஜ்வாடி கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் இந்த மாத ஆரம்பத்தில் சமாஜ்வாடி  கட்சியினர் 3 நாள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு முன்பாக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் அவரது மகன் அகிலேஷ் யாதவ் எம்.பி. ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதற்கு பாராளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 

அதன் பிறகு நடந்த போராட்டத்தின் போது அகிலேஷ் யாதவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த போராட்டத்தின்போது போலீசாருக்கும் சமாஜ்வாடி கட்சியினருக்கும் இடையே பல இடங்களில் மோதல்கள் நடைபெற்றன.

இந்த போராட்டம் நடந்த இரு வாரங்களுக்குள் மீண்டும் ஒரு போராட்டத்தை நடத்த சமாஜ்வாடி கட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த போராட்டம் வருகிற 25-ம் தேதி நடக்கும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

இந்த தகவலை அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த 7,8,9 தேதிகளில் நடந்த 3 நாள் போராட்டம் 17-ம் தேதி நடந்த கிராம அளவிலான போராட்டம் ஆகியவை வெற்றி பெற்றுள்ளன. எனவே இப்போது வருகிற 25-ம் தேதி மேலும் ஒரு போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

கடந்த போராட்டங்களின்போது சமாஜ்வாடி கட்சியினர் மீது போலீசார்  நடத்திய தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக தேசிய மனித உரிமை கமிஷனில் தாங்கள் புகார் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வருகிற 2012-ல் உ.பி.யில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தங்களது  கட்சியில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் அவர்கள் தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்புக்கள் தரப்படும் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago