முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகிலேயே பணக்கார நாடு கத்தார் முன்னணியில் உள்ளன

செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

நியூயார்க், பிப். - 28 - உலகிலேயே பணக்கார நாடாக கத்தாரை புகழ் பெற்ற போர்பஸ் இதழ் சுட்டிக் காட்டியுள்ளது. உலகின் 15 பணக்கார நாடுகளின் பெயரை போர்பஸ் இதழ் வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 1.7 கோடி மக்கள் தொகை கொண்ட கத்தார் நாடு செல்வ செழிப்புடன் திகழ்வதற்கு காரணம் அந்நாட்டின் இயற்கை வளம்தான். கத்தார் நாடுதான் 2022 ல் உலக கோப்பை கால்பந்து போட்டியையும், 2020 ஒலிம்பிக் போட்டியையும் நடத்தவுள்ளது. உலகின் பணக்கார நாடுகள் வரிசையில் லக்சம்பாக்குக்கு 2 வது இடமும், சிங்கப்பூருக்கு 3 வது இடமும் பெற்றுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, ஹாங்காங், சுவிஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிடம் பணக்கார 15 நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. சர்வதேச நிதியம் வெளியிடும் ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு மதிப்பின் அடிப்படையில் பணக்கார நாடுகள் தேர்வு செய்யப்படுகின்றன. அதோடு மட்டுமல்லாது, உலகின் மிகப் பெரிய ஏழை நாடுகளின் பட்டியலையும் போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. மிகவும் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் புருண்டி, லைபீரியர், காங்கோ ஆகியவை முன்னணியில் உள்ளன.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்