முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோட்டில்மின் கட்டணம் செலுத்த தானியங்கி இயந்திரம் அறிமுகம்

செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

ஈரோடு,பிப்.28- ஈரோட்டில் தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் இயந்திரம் நேற்று ஈரோடு மேற்பார்வை பொரியாளர்அலுவலகத்தில் அறிமுக ப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்மண்டல தலைமை பொரியாளர் வி.மனோகரன்   கூறியதாவது:தானியங்கி இயந்திரம் முலம் மின் கட்டணம் செலுத்தும்  இந்த இயந்திரம் இதற்கு முன்சென்னைமற்றும் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தற்போது ஈரோடுமற்றும் சேலத்தில்தலா 8 இடங்களில்  இந்த தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் இயந்திரம் நிறுவப்பட வுள்ளது. இந்த இயந்திரம் முலம் நுகர்வோர்கள் பணமாகவோ,காசோலையாகவோ(செக்),வங்கி வரையோலை(டி.டி).யாகவோ செலுத்தலாம் .இந்த இயந்திரம் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரைசெயல்படும்.ஈரோட்டில் தற்போதுமின் வாரிய அலுவலகத்தில் அமைக்கப்படுள்ள இந்த இயந்திரம் பிறகு ஈரோடு பஸ்நிலையம்,கொல்லம் பாலையம்,லோட்டஸ் மருத்துவமணை,வீரப்பன் சத்திரம்,பாஜர்,திண்டல் ஆகிய இடங்களில் நிறுவப்பட உள்ளது.  இந்த சேவைக்கு மின் கட்டணத்தை தவிர வேறு கூடுதல் கட்டணம் ஏதுவும் இல்லை.மேலும் இதற்கு விடுமுறை கிடையாது.வீடுகளில் மின் கட்டண ரிடிங் எடுத்த 20 நாட்களுக்குள்நுகர்வோர் பணம் செலுத்தவேண்டும்.இந்த இயந்திரத்தில் காந்திஅடிகள்  படம் பொரித்த நோட்டுகளை மட்டும் செலுத்த முடியும்.சில்லரை நாணயங்களை செலுத்த முடியாது.செக் மற்றும் டி.டி.முலம் பணம் செலுத்துவோர் அதன் பின் பக்கம் தங்கள் செல்போன் நெம்பரை குறிக்க வேண்டும். இந்த இயந்திரத்தில் கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்கும் வசதி உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார். கூட்ட நெரிசலை குறைக்கவும்,நுகர்வோர் எளிதாக மின்கட்டணம் செலுத்த வசதியாக மின் வாரியம் அமைத்துள்ள இந்ததானியங்கி மின் கட்டண இயந்திரம் பொது மக்களிடம் பெரும் வரவேற்பை கொடுக்கும் என மின் வாரிய அதிகாரிகள் கருதுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்