முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை காலிறுதி - பாகிஸ்தான் - மே.இ.தீவு மோதல்

புதன்கிழமை, 23 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மிர்பூர், மார்ச். 23 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதிச் சுற்றில் மிர்பூரி ல் இன்று நடக்க இருக்கும் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் மே ற்கு இந்தியத் தீவு அணிகள் இன்று மோத இருக்கின்றன. 

உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன. 

உலகக் கோப்பையின் முதல் கால் இறுதிப் போட்டி இன்று வங்காள தேசத்தில் உள்ள மிர்பூரில் நடக்கிறது. இதில் பாகிஸ்தான் மற்றும் மே ற்கு இந்தியத் தீவுகள் அணிகள் மோதுகின்றன. பிற்பகல் 2 .00 மணிக்கு துவங்கும் இந்த ஆட்டம் பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. 

இதில் யார் வென்று அரை இறுதி போட்டிக்கு நழைய போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இரு அணிகளும் லீக் ஆட்டத்தில் ஆடியுள்ளதைப் பார்க்கும் போது, பாகிஸ்தான் அணியே வலுவான அணியாக தெரிகிறது. 

ஏ பிரிவில் இடம் பெற்று இருந்த பாகிஸ்தான அணி அந்தப் பிரிவில் 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்தது. முன்னதாக நடந்த லீக் போட்டிகளைப் பொறுத்தவரை பாகிஸ்தான் அணி மொத்தம் 6 ஆட்டத்தில் பங்கு கொண்டது. 

இதில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றது. 1 போட்டியில் மட்டுமே தோல்வியை சந்தித்து இருந்தது. ஆனால் பி பிரிவில் இடம் பெற்று இருந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி அந்தப் பிரிவில் 4 -வது இடத்தி ல் இருந்தது.  6 லீக் போட்டிகளில் ஆடிய அந்த அணி 3 - ல் வெற்றியு ம், 3 - ல் தோல்வியும் பெற்று இருந்தது. தட்டுத் தடுமாறித்தான் காலி றுதிக்குள் நுழைந்தது. 

முதல் கால் இறுதியில் ஆடும் இரு அணிகளையும் ஒப்பிடும் போது, பாகிஸ்தான் அணியே வலுவாக உள்ளது. எனவே பாகிஸ்தான் இந்த போட்டியில் வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு செல்ல பிர காசமான வாய்ப்பு உள்ளது. 

ஆனால் பாகிஸ்தான் அணியை எப்படியாவது வீழ்த்தி அரை இறுதிக் கு சென்று விட வேண்டும் என்று மேற்கு இந்தியத் தீவுகள் அணி பல் வேறு வியூகங்களை வகுத்து உள்ளது. இதற்காக கடும் பயிற்சியிலும் ஈடுபட்டு உள்ளது. அதற்கு பலன் கிடைக்குமா? என்பதற்கான விடை இன்று தெரிய வரும். 

பாகிஸ்தான் மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே மிர்பூரில் பகல் 2.00 மணிக்கு துவங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர் ட்ஸ், ஸ்டார் கிரிக்கெட் மற்றும் இ.எஸ்.பி.என். தொலைக் காட்சிகளி ல் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்