முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள சட்டசபையின் பட்ஜெட் தொடர் கவர்னர் உரை நிகழ்த்தினார்

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், மார்ச் - 2 - கேரள சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமானது. முதல்நாளான நேற்று மாநில கவர்னர் பரத்வாஜ் சபையில் மரபுபடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் உம்மன்சாண்டி அரசின் புதிய வளர்ச்சித் திட்டங்களை எடுத்துரைத்தார். மத்திய அரசின் திட்டங்களால் கிராமங்கள், நகரங்கள் முன்னேறி இருப்பதாகவும் கவர்னர் தமது உரையில் தெரிவித்தார். 100 நாள் வேலைத் திட்டத்தையும் கவர்னர் பாராட்டித் தள்ளினார். மற்றும் ஒரு ரூபாய்க்கு 25 கிலோ அரிசி, கொச்சி மெட்ரோ ரயில் திட்டம், திருவனந்தபுரம் மோனோ ரயில் திட்டம் போன்ற முதல்வரின் பல்வேறு நடவடிக்கைகளையும் கவர்னர் பரத்வாஜ் பாராட்டி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்