முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வனப்பகுதியில் திரிந்த ஆந்திர வாலிபர் தீவிரவாதியா?

புதன்கிழமை, 23 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

ஸ்ரீவில்லி,மார்ச்.23 - ஸ்ரீவில்லி அருகே செண்பகத் தோப்பு வனப்பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றித் திரிந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.  அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என்று எழுந்த சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அருகே செண்பகத் தோப்பு என்ற வனப்பகுதி உள்ளது.  நேற்று மாலை 4 மணியளவில் வனத்துறை அதிகாரி பழனிராஜ் மற்றும் வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்து கொண்டிருந்த சிவப்பு சட்டை மற்றும் கருப்பு பேண்ட் அணிந்த கருப்பு நிறமுடைய வாலிபரை அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அந்த வாலிபரை ஸ்ரீவில்லி நகர காவல் நிலையத்தில் வனத்துறையினர் ஒப்படைத்தனர்.

இதையடுத்து அந்த வாலிபரிடம் சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பனையம் என்ற பகுதியை சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் சுரேஷ்(28) என்பதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து தீவிரவாதியாக இருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநில வாலிபர் கைது செய்யப்பட்டதையடுத்து ஸ்ரீவில்லி வனப்பகுதியில் போலீசாரும், அதிரடிப்படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் தற்போது ஈடுபட்டு உள்ளனர்.  இந்நிலையில் இந்த வாலிபர் கடந்த சில வருடங்களுக்கு முன் விருதுநகர் பகுதியில் சுற்றித் திரிந்ததாகவும், தீவிர விசாரணைக்குப் பின்னர் மீண்டும் ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்