முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் கே.பி.பி.சாமி வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை

புதன்கிழமை, 23 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச் 23 - மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக புகார் வந்ததையடுத்து அமைச்சர் கே.பி.பி.சாமி வீடு, அலுவலகம் மற்றும் அவரது சகோதரர் சங்கரின் இல்லத்திலும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தலைமையிலான பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு  பணப்பட்டுவாடா செய்வதை தீவிரமாக கண்காணிக்க கண்காணிப்பாளர்கள் தலைமையில் பறக்கும் படையினரை தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது. பல்வேறு தடைகளை விதித்தாலும் அதையும் மீறி ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக ஆங்காங்கே தகவல்கள் வந்துள்ளது. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு உதவிகள் என்பது போல் வாக்காளர்களை கவரும் போக்கு நடந்து வருகிறது. 

திருவொற்றியூர் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் கே.பி.பி.சாமி மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக வந்த தகவலையடுத்து தேர்தல் செலவு கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் பறக்கும் படையினர் அமைச்சர் கே.பி.பி.சாமி வீடு, அலுவலகம், கே.பி.பி.சாமியின் சகோதரர் சங்கரின் நேற்று பகல் 12 மணி அளவில் வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் சாமியின் வீட்டுக்கருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை திறந்தும் சோதனை நடத்தினர். இதில் பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக அமைச்சர் சாமியின் அலுவலகத்தில் வைத்து மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு பணப்பட்டுவாடா நடந்ததாக கூறப்பட்ட புகாரினால் இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது. 

சோதனைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. சாமியின் வீட்டு முன்பு ஏராளமான பெண்கள் நின்றிருந்ததும் பதிவு செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைகள் தொடரும், தொடர்ந்து கண்காணிப்பு சோதனைகள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது உள்ள தேர்தல் கண்காணிப்பாளருடன் கூடுதலாக நந்தகுமார் என்ற அதிகாரியையும் தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago