முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில ஒதுக்கீடு ஊழல் - வெங்கையா நாயுடு கோரிக்கை

புதன்கிழமை, 23 மார்ச் 2011      ஊழல்
Image Unavailable

 

விஜயவாடா, மார்ச் 23 - ஆந்திர மாநிலத்தில் தொழிற்சாலைகளுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கூட்டு சட்டமன்ற குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கோரிக்கை எழுப்பியுள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

ஆந்திராவில் தொழிற்சாலைகளுக்கு நிலம் ஒதுக்கீடு  செய்ததில் பல கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.  இது குறித்து  சட்டமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ஆந்திர அரசு இதை ஏற்க மறுக்கிறது என்று வெங்கையா நாயுடு  தெரிவித்தார்.

இந்த ஊழல் குறித்து சட்டமன்ற கூட்டு குழு விசாரணைக்கு காங்கிரஸ் தலைமையிலான ஆந்திர அரசு உத்தரவிட்டு எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நில ஊழல் தொடர்பாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய  சந்தேகங்களுக்கு  ஆந்திர அரசு விளக்கம் அளிக்க வேண்டும். அது மட்டுமல்ல ஆந்திர மக்களுக்கும் இந்த  அரசு இது குறித்து தகுந்த விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த நில ஊழல் தொடர்பாக ஆந்திர சட்டசபையில் எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திய அமளியால் கடந்த நான்கு  நாட்களாக அவை நடவடிக்கைகள்  பாதிக்கப்பட்டுள்ளன.

அநீதியான வழக்கங்களை தவிர்க்க மேல் சபை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க பகிரங்க ஓட்டு  முறையை கையாள வேண்டும் என்றும் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார்.

மக்களின் பிரதிநிதிகள்  அரசியல் கட்சிகளின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எம்.எல்.சி. தேர்தலின் போது  அந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் அரசியல் கட்சிகளின் கட்டளைக்கிணங்க நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony