முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யாழ்ப்பாணத்தில் 3 சிங்கள ராணுவத்தினர் சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 10 மார்ச் 2012      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, மார்ச் 10 - யாழ்ப்பாணத்தில் 3 சிங்கள ராணுவத்தினர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வாழும் யாழ்ப்பாணம் தீபகற்பம் ஒரு காலத்தில் தனி ஈழம் கேட்டு போராடிய தமிழ் விடுதலைப்புலிகளின் தலைமையிடமாக இருந்தது. கடந்த 2009 ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டனர். இதை அடுத்து இந்த போர் முடிவுக்கு வந்தது.

இப்போது யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள சாவகச்சேரி என்ற இடத்தில் ராணுவ முகாம் ஒன்று உள்ளது. இந்து கோவில் ஒன்றின் அருகே அமைந்துள்ள இந்த முகாமில் நேற்று சிங்கள ராணுவ வீரர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தனது சக வீரர்கள் இருவரை சுட்டுக்கொன்று தன்னையும் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்திருக்கலாம் என்று ராணுவ செய்தி தொடர்பாளர் நிகல் ஹாப்புவராச்சி தெரிவித்தார். இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago