முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது: முலாயம்சிங்

திங்கட்கிழமை, 12 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மார்ச். 13 - சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று உத்தரபிரதேசத்தில் ஆட்சி அமைத்துள்ள சமாஜ்வாடி கட்சி இப்போது தேசிய அளவிலும் தம்மை முன்னிலைப்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகிறது. உத்தரபிரதேச முதல்வராக தம்மை தேர்வு செய்த தந்தை முலாயம்சிங் யாதவ், தேசிய அளவில் தீவிரம் காட்டுவார் என்று ஏற்கனவே அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 2014 ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் முலாயம்சிங் யாதவ் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் என்றும், 3 வது அணியை சமாஜ்வாடி உருவாக்கக் கூடும் என்று யூகங்கள் நிலவி வருகின்றன. இது குறித்து முலாயம்சிங் கூறுகையில், தம்மை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்து யாரும் இதுவரை அணுகவில்லை என்று தெரிவித்தார். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கும் 3 வது அணி அமைப்பது பற்றி மலுப்பலான பதிலையே அவர் கூறினார். 3 வது அணி பற்றி ஊடகங்களில் தான் படித்து வருகிறேன். அப்படி ஒரு முயற்சி நடப்பதாக தெரியவில்லை. யாரும் என்னை தொடர்பும் கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார். நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடருக்காக முலாயம்சிங் யாதவ் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்