முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய எம்.எல்.ஏக்களில் 35 சதவீதம் பேர் கிரிமினல்களாம்!

திங்கட்கிழமை, 12 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மார்ச்.13 - உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றோரில் கோடீஸ்வரர்களும், குற்றவாளிகளும் கணிசமான அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து மொத்தம் 690 எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் 35 விழுக்காட்டினர் மீது அதாவது 252 எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் உத்தரபிரதேசம்தான் முதலிடம் வகிக்கிறது. கடந்த 2007 தேர்தலை ஒப்பிடும் போது இது 8 சதவீதம் அதிகம். தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் 66 சதவீதம் அதாவது 457 எம்.எல்.ஏக்கள் கோடீஸ்வரர்கள். இது சென்ற தேர்தலை விட 32 சதவீதம் அதிகம். உத்தரபிரதேச சட்டபேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 189 எம்.எல்.ஏக்கள் தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதே போல் 221 எம்.எல்.ஏக்கள் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். உ.பி. பிஹாபூர் தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட சமாஜ்வாடி கட்சியின் மித்ராசென் மீது மட்டும் 36 கிரிமினல் வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் எம்.எல்.ஏ. நவாப் காமின் அலியின் சொத்து மதிப்பு ரூ. 56.89 கோடி. பகுஜன் சமாஜ்கட்சியின் ஜாஆலமின் சொத்து மதிப்பு ரூ. 54.44 கோடி. மணிப்பூர் சட்டசபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் எவர் மீதும் கிரிமினல் வழக்குகள் இல்லை. ஆனால் 16 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். பஞ்சாபில் 22 பேர் மீது குற்றவழக்குகள் உள்ளன. 86 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளன. கோவாவை பொறுத்தவரையில் 40 பேர் கொண்ட பேரவையில் 37 பேர் கோடீஸ்வரர்கள். 12 எம்.எல்.ஏக்கள் கிரிமினல்கள் என்று தெரிகிறது. உத்தரகாண்டில் 32 பேர் கோடீஸ்வரர்களாகவும், 19 பேர் கிரிமினல்களாகவும் இருப்பதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்