முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடுகளை அபகரிக்க முயற்சி: ராவணன் மீது புகார்

திங்கட்கிழமை, 12 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, மார்ச். 13​- டெல்லி கிரேட்டர் கைலாஸ் பகுதியில் வசித்து வருபவர் ஜோதிடர் பண்டிட் வெற்றிவேல். இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-​ எனக்கு சொந்தமாக சென்னை மயிலாப்ர் மற்றும் ஈரோட்டில் வீடுகள் உள்ளது. கடந்த 2008-​ம் ஆண்டு நான் ஈரோட்டில் உள்ள வீட்டில் இருந்த போது சசிகலாவின் உறவினர் ராவணனன் எனது வீட்டுக்கு வந்தார். உங்களை சந்திப்பதற்காக சசிகலா கோவையில் காத்திருக்கிறார். உடனே என்னுடன் புறப்பட்டு வாருங்கள் என்று கூறி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றினார். கோவை சென்றதும் எனது சொத்து விவரங்களை கேட்டு மிரட்டினார். பின்னர் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து நட்சத்திர ஓட்டலில் அடைத்து வைத்து மிரட்டி வெற்றுப் பேப்பர்களில் மிரட்டி கையெழுத்து வாங்கி விட்டு விரட்டி விட்டனர்.

இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசில் நான் புகார் செய்தேன். இந்த வழக்கு பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டு சில உத்தரவுகளை பிறப்பித்தது. அதுவும் பின்பற்றப்படவில்லை. சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒரு முறை கூட என்னை அழைத்து செல்லவில்லை. எனவே இந்த வழக்கை விசாரித்து ராவணனன் மீது நடவடிக்கை எடுப்பதுடன் நான் கையெழுத்து போட்டு கொடுத்த வெற்றுப் பேப்பர்களையும் என்னிடம் வாங்கி தரவேண்டும். 

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago