முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசாரணைக்கு ஆஜராகும்படி மாறன் சகோதர்களுக்கு சம்மன்

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2012      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.16 - மாலேசியா நாட்டு நிறுவனமானது சன் குழுமத்தில் ரூ.550 கோடி முதலீடு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு வழக்கில் விசாரணைக்கு வரும் 20-ம் தேதி ஆஜராகும்படி தயாநிதி மாறன் மற்றும் கலாநிதிமாறன் ஆகியோர்களுக்கு மத்திய அமுலாக்க பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஏர்செல் நிறுவனத்தை மலேசியா நாட்டு தகவல் தொடர்பு நிறுவனமான மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கும்படி முன்னாள் தகவல்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் வற்புறுத்தியதாகவும் அதனால் ஏர்செல் நிறுவனத்திற்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் கால தாமதம் செய்தாகவும் தயாநிதிமாறன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்தபின்னர் சன்குழுமத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ.550 கோடி முதலீடு செய்ததாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தயாநிதிமாறன் மற்றும் சன்குழுமம் நிர்வாக இயக்குனரும் தயாநிதிமாறனின் மூத்த சகோதரரான கலாநிதி மாறன் மீதும் மத்திய அமுலாக்க பிரிவினர் மற்றும் சி.பி.ஐ. பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தி வருகிறது. இந்தவழக்கு தொடர்பாக விசாரணைக்கு கலாநிதிமாறனோ அல்லது அவரது பிரதிநிதியோ வருகின்ற 20-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். மேலும் வருகின்ற 21-ம் தேதி அன்று தயாநிதிமாறனோ அல்லது அவரது பிரதிநிதியோ விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று மத்திய அமுலாக்க பிரிவானது அவர்கள் இருவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2004-2005-ம் ஆண்டு தயாநிதி மாறன், மத்திய தகவல்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்திற்கு எதிராகவும் மேக்சிஸ் நிறுவனத்திற்கு சாதகமாகவும் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டையொட்டி கடந்த ஆண்டு மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இந்த குற்றச்சாட்டை தயாநிதிமாறன் மறுத்து வருகிறார். ஆனால் இந்த குற்றச்சாட்டு தொடர்புடைய பல நபர்களிடம் அமுலாக்க பிரிவினர் விசாரணை நடத்தி பதிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்