முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்ஜெட்டில் ராணுவ செலவுக்கு ரூ.1.93,407 கோடி ஒதுக்கீடு

சனிக்கிழமை, 17 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் 17 -  ராணுவ செலவினங்களுக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ. 1 லட்சத்து 93 ஆயிரத்து 407 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் லோக்சபையில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2012 -13 ம் நிதியாண்டில் ராணுவ செலவினங்களுக்காக ரூ. 1 லட்சத்து 93 ஆயிரத்து 407 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,64,415 கோடி தொகையைக் காட்டிலும் 17 சதவீதம் அதிகமாகும். நாட்டின் பாதுகாப்புத் தேவையை கருத்தில் கொண்டும் தற்போதைய தேவைகளுக்காகவும் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரணாப் முகர்ஜி கூறினார். இந்த தொகையில் ரூ. 79 ஆயிரத்து 500 கோடி ராணுவ மூலதன கொள்முதலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அடுத்த 10 ஆண்டுகளில் ராணுவத்தை பலப்படுத்த மத்திய அரசு அதிகமான முதலீடுகளை செய்ய உள்ளது. 145 அல்ட்ரா லைட் ஹொவிட்சர் விமானங்களையும், 197 லேசு ரக ஹெலிகாப்டர்களையும் வாங்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. ராணுவத்திற்கு தேவையான நவீன ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றை வாங்கவும் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்