முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய தமிழகம் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

வியாழக்கிழமை, 24 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை. மார்ச். 24 - புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் பட்டியலை கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி நேற்று வெளியிட்டார். சென்னை நுங்கம்பாக்கத்தில உள்ள கட்சி அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களிடம் டாக்டர். கிருஷ்ணசாமி பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:​ அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் டாக்டர். கிருஷ்ணசாமியாகிய நானும், நிலக்கோட்டை தொகுதியில் இரா.அ.ராமசாமியும் போட்டியிடுகிறோம். அ.தி.மு.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். நாளை (இன்று) வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு, தேர்தல் பிரசாரம் தொடங்குகிறேன். தேர்தல் அறிக்கை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். விலைவாசி உயர்வு, நிர்வாக திறமையின்மை, சட்டம் ஒழுங்கு பிரச்சினையால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து பிரசாரம் செய்வோம். தேர்தல் ஆணையம் ஒதுக்கும் ஏதாவது ஒரு சின்னத்தில் போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony