முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவால் விட்டவர்களுக்கு மக்கள் பதிலடி: முதல்வர்

வியாழக்கிழமை, 22 மார்ச் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, மார்ச். 22 - சவால் விட்டவர்களுக்கு சங்கரன்கோயில் தொகுதி மக்கள் தக்க பதிலடி கொடுத்து விட்டார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அ.தி.மு.க. பிரமுகர்கள் 7 பேரின் இல்லத் திருமணங்களை நடத்தி வைக்க வந்திருந்த முதலமைச்சர் ஜெயலலிதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சங்கரன் கோவில் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வாக்குகள் அதிகம் பெற்று காலையில் இருந்தே வெற்றி முகத்தில் இருந்தார். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்துள்ள வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். ஒன்றுபட்ட அதிமுகவுக்கு 1989ல் நான் தலைமை பொறுப்பு ஏற்ற நாள் முதல் 2012 வரையில் சங்கரன்கோவில் தொகுதியில் ஒவ்வொரு தேர்தலிலும் அந்த தொகுதி மக்கள் அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்து சட்ட சபைக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.

நல்ல காலங்களிலும், சோதனை காலக்கட்டத்திலும் சங்கரன்கோவில் தொகுதி மக்கள் அதிமுகவை என்றுமே கைவிட்டதில்லை. எப்போதும் துணை இருப்பது போல இப்போதும் துணை நின்று அதே வெற்றியை அதிமுகவுக்கு முழுமையாக வெற்றியை கொடுத்து இருக்கிறார்கள்.   இன்னும் தேர்தல் முடிவு முழுமையாக வரவில்லை. மகத்தான வெற்றியை மக்கள் கொடுத்திருக்கிறார்கள். சங்கரன்கோவில் தொகுதி மக்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்பது எங்களுக்கு தெரியும். எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகிறோம் என்பது தான் தெரிய வேண்டியிருந்தது.

 

கேள்வி: கூட்டணி அமைத்து போட்டியிட்டு பெற்ற வாக்குகளை விட இப்போது கூட்டணி இல்லாமல் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறதே அது குறித்து உங்கள் கருத்து என்ன?

 

பதில் : நீங்களே சொல்லி விட்டீர்கள். அதற்கு பிறகு நான் என்ன கருத்து சொல்வது.

 

கே: சங்கரன்கோவில் தொகுதியில் பார்ப்போம் என்று சவால் விட்டவர்கள் நிலைமை இப்போது என்னவாயிற்று?

 

ப: இந்த கேள்வியை nullநீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.  அப்படி சவால் விட்டவர்களுக்கு சங்கரன் கோவில் தொகுதி மக்கள் சரியான பதிலடி கொடுத்து விட்டார்கள்.  இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா நிருபர்களிடம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்