முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயகாந்திற்கு எதிராக தொகுதி மக்கள் மறியல்

புதன்கிழமை, 21 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

ரிஷிவந்தியம், மார்ச்.- 21 - ரிஷிவந்தியம் தொகுதி மக்கள் விஜயகாந்திற்கு எதிராக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகினர். இதனால் ரிஷிவந்தியத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:- ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.வும், எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த சட்டமன்ற தேர்தலின் போது தொகுதியில் உள்ள ஆர்க்கவாடி, சுத்தமலை, அருகம்பட்டு கிராம மக்களிடம் முசுகுந்தா ஆற்றில் பாலம் அமைத்து பஸ் வசதி செய்து தருவேன் என்று வாக்குறதி அளித்தார். இதேபோல எம்.பி. தேர்தலின் போது கள்ளக்குறிச்சி தி.மு.க. எம்.பி. ஆதிசங்கரும் வாக்குறுதி அளித்து இருந்தார். இதற்கான சிறு முயற்சி கூட இன்று வரை எடுக்கவில்லை. இதனால் 12 கிராம மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.  குறிப்பாக 3 கிராம மக்கள் சுமார் 15 கி.மீ. சுற்றிக் கொண்டு பக்கத்து கிராமங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த இளைஞர் பெருமன்றத்தினர் கிராம மக்கள் 200 பெண்கள் உள்பட 500 பேர் திரண்டு சங்கராபுரம்-திருக்கோவிலூர் சாலை சந்திப்பில் பகண்டை கூட்டு ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிராம மக்களுடன் இளைஞர் பெருமன்ற செயலர் வெங்கடகிருஷ்ணன், மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மாநில துணை தலைவர் டேவிட்குமார், சரவணன், ஊராட்சி மன்ற அரும்புராம்பட்டு தலைவர் தேவேந்திரன் ஆகோயரும் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.  இது குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மக்கள் கலைந்து செல்லாததால் இளைஞர் பெருமன்றத்தினர் உள்பட 150 பேரை கைது செய்து லட்சுமி திருமண நிலையத்தில் தங்க வைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்கள் விஜயகாந்த் தோர்தலின் போது வந்தார். பின்னர் வரவில்லை. வாக்குறுதி பற்றி வாய் திறக்காத தை கண்டித்து கோஷம் எழுப்பினர். இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காவிடில் பாதிக்கப்பட்ட 12 கிராம மக்களும் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்று இளைஞர் பெருமன்றத்தினர் கூறினர்.  கைது செய்யப்பட்ட அனைவரும் மாலை விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் ரிஷிவந்தியம் தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்