முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்னும் ஒரு மாதத்தில் அக்னி 5 ஏவுகணை ஏவப்படும்

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

தக்கலை, மார்ச். 23 - 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு சென்று தாக்கும் அக்னி 5 ஏவுகணை இன்னும் ஒரு மாதத்தில் ஏவப்படும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவன தலைமை கட்டுப்பாட்டு அதிகாரியும், விஞ்ஞானியுமான சிவதாணுபிள்ளை தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 1983 ம் ஆண்டில் ஒருமித்த ஏவுகணை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது விஞ்ஞானி அப்துல் கலாமுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அத்திட்டத்தில் அக்னி பிருத்வி ஏவுகணைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதுடன் தொழில்நுட்ப வல்லுனர்களும் வளர்ச்சி அடைந்தனர். 5 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று தாக்கும் அக்னி 5 ஏவுகணை இன்னும் ஒரு மாதத்தில் ஏவப்படும். இன்னும் நவீன தொழில்நுட்பத்துடன் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். தொழில்நுட்பம் இல்லாமல் பெரிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்த முடியாது. நம் நாட்டில் உள்ள பிரமோஸ் ஏவுகணை அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்தது. இது ஒலியை விட 3 மடங்கு வேகமாக செல்லக் கூடியது. இது முப்படைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு மித்த ஏவுகணை திட்டத்தில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. 

இளம் பொறியாளர்களிடம் புதிய சிந்தனைகள் ஆராயும் திறன் காணப்படுகிறது. அதை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதற்காக பல்கலைக்கழகங்களுடன் டி.ஆர்.டி.ஓ. திடத்தின் படி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பல்கலைக் கழகமும் ஒவ்வொரு துறையில் திறமைகளை வளர்த்து கொண்டு வருகின்றன. பயோ, நானோ போன்று 5 வகையான பாடப்பிரிவுகள் ஏவுகணை தொழில்நுட்பத்துடன் தொடர்புடையவையாகும். உலகில் 520 அணு உலைகள் உள்ளன. கூடங்குளத்தில் உள்ளது போன்ற அணு உலைகள் 12 நாடுகளில் உள்ளன. இந்த அணு உலை திட்டம் செயல்பட அரசு அனுமதி அளித்தது வரவேற்கத்தக்கது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்