முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜீவநதி கவிதை நூல்: எஸ்.பி.முத்துராமன் வெளியிட்டார்

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,பிப்.- 27 - நடிகர் ரஜினிகாந்த் பற்றிய `ஜீவநதி' என்ற கவிதை நூலை இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் வெளியிட்டார். நடிகர் ரஜினிகாந்த் பற்றிய கவிதை தொகுப்பு நூலான `ஜீவநதி'  சென்னை எழும்nullரில் உள்ள ஆல்பர்ட் திரை அரங்கில் வைத்து வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட இயக்குனரான எஸ்.பி.முத்துராமன், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தானு, திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் அங்கு வசிக்கும் குழந்தைகள் உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்நூல் கண்ணகி பதிப்பக ஆசிரியர் குழுவினரால் எழுதப்பட்டுள்ளது. தமிழ் செல்வன் இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இம்பிரமாண்டமான நூல் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும் என இதன் தயாரிப்பாளர்கள் செ.ராஜபாண்டிதுரை மற்றும் ம.மகேஷ் ஆகியோர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இக்கவிதை நூலினை எஸ்.பி.முத்துராமன் வெளியிட, கலைப்புலி எஸ்.தானு பெற்றுகொண்டார். இந்நூலின் முதல் விற்பனையை ராகவா லாரன்ஸின் அறக்கட்டளையை சேர்ந்த குழந்தைகள் துவக்கி வைத்தனர். இவ்விழாவில் கலந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் இந்த நூல் தங்களுக்கு ஒரு நல்ல பொக்கிஷமாக இருக்கும் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்நூலின் விற்பனையில் ஒரு பகுதி ராகவா லாரன்ஸால் நடத்தப்படும் மாற்றுதிறனாளிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான அறக்கட்டளையில் உள்ள குழந்தைகளின் கல்வி செலவிற்காக அளிக்கப்படும் என கண்ணகி பதிப்பகத்தின் விறபனை பிரிவு தலைவர் தி.ஜெயபாலமுருகன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்