முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடத்திச் செல்லப்பட்ட 2 இத்தாலியர்கள் விடுவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புவனேஸ்வர், மார்ச் 26 - மாவோயிஸ்ட்டுகளால் கடத்திச்செல்லப்பட்ட 2 இத்தாலியர்களில் ஒருவர் நேற்று அதிகாலை விடுவிக்கப்பட்டார் ஆனால் மற்றொரு இத்தாலியர் பற்றியும் கடத்தப்பட்ட பிஜு ஜனதாதளம் கட்சி எம்.எல்.ஏ. என்ன ஆனார் என்பது பற்றியும் எதுவும் தெரியவில்லை. ஒரிசாவின் கந்தமால்கஞ்சம் மாவட்ட எல்லையில் கடந்த வாரம் கிளாடியோ கொளஞ்சியோ (60), பசுஸ்கோ பவுலோ (55) என்ற 2 இத்தாலிய நாட்டவரை மாவோயிஸ்ட்டுகள் கடத்திச் சென்றனர். தமக்கு எதிரான பசுமை வேட்டை நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும், சிறையில் உள்ள மாவோயிஸ்ட் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை மாவோயிஸ்ட்டுகள் முன்வைத்தனர். மேலும் தங்களது கோரிக்கைகளை பற்றிப் பேசுவதற்காக சர்மா மற்றும் தண்டபாணி மொஹந்தி ஆகியோரை தூதர்களாக அவர்கள் நியமித்தனர். அந்த தூதர்களுடன் ஒரிசா மாநில அரசு 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தியது. 

இந்நிலையில் கோரபுட் மாவட்டத்தில் லஷ்மிபூர் தொகுதியின் எம்.எல்.ஏ. ஜின்னா ஹிகாவை திடீரென மாவோயிஸ்ட்டுகள் கடத்திச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அரசுடனான பேச்சுவார்த்தையை மாவோயிஸ்ட்டு தூதர்கள் தற்காலிகமாக நிறுத்தினர். மத்திய மாநில அரசுகள் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. மற்றும் 2 இத்தாலியர்களை விடுவிப்பது குறித்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே கந்தமால் மாவட்டம் தரிங்கிபடி என்ற இடத்தில் நேற்று அதிகாலை கிளாடியோ கொளஞ்சியோ என்ற ஒரு  இத்தாலியரை மட்டும் மாவோயிஸ்ட்டுகள் விடுவித்துச் சென்றதாக செய்திகள் வெளியாயின. இன்னொரு இத்தாலியர் என்ன ஆனார் என்பதுபற்றியும்,  கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.வின் கதி என்ன என்பதும் தெரியவில்லை. மாவோயிஸ்ட்டுகளின் தொடர் கடத்தல் சம்பவங்களால் ஒரிசா மாவட்டம் முழுவதும் பதட்டம் நீடிக்கிறது. மாநிலத்தை ஆளும் பிஜூ ஜனதாதளம் ஆட்சியை கலைத்துவிட்டு ஜனதிபதி ஆட்சியை அமுல்படுத்த காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்