முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. எதிர்ப்பு எதிரொலி: சட்டத்தில் புதிய திருத்தம் மத்திய அரசு

திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஏப். - 2 - ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்ப்பின் எதிரொலியாக ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தில் சில சரத்துகளில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தில் 3 பிரிவுகளில் மாற்றம் கொண்டு வருவதற்கான திருத்தம் அமைச்சரவை குழு முன் வைக்கப்பட்டுள்ளது என்றார். முன்னதாக, காஷ்மீர் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. பிரதிநிதி  கெய்ன்ஸ் இச்சட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் இது போன்ற சட்டங்களுக்கு இடமில்லை. எனவே இதனை ரத்து செய்ய வேண்டும். ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் கொடுமையானது என்று கூறியிருந்தார். இந்த சட்டத்தை ரத்து செய்ததில் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தீவிரமாக உள்ளார். இதனை எதிர்த்து மனித உரிமை போராளி இரோம் சர்மிளா தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் இந்த பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த சட்டத்தின் மூலம் இந்திய பாதுகாப்பு படையினர் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். எத்தனை காலம் வேண்டுமானாலும் விசாரணை என்ற பெயரில் தம் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்பது போன்ற கடுமையான வசதிகளை இந்த சட்டம் ராணுவத்திற்கு தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்