முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி வெங்கடாசலபதியை வழிபட வி.ஐ.பி. டிக்கெட் ரத்து

புதன்கிழமை, 4 ஏப்ரல் 2012      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை,ஏப்.- 5 - திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் சாமி தரிசனம் செய்ய வி.ஐ.பி. டிக்கெட் முறையை ரத்து செய்ய திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பெரிய கோயில்களில் சாமி தரிசனம் செய்ய கட்டணம் டிக்கெட் கொடுக்கப்படுகிறது. இது ஒரு வகையில் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க உதவினாலும் அதிக கட்டணம் கொடுக்க முடியாத நிலையில் சாதாரண  மக்கள் இருக்கிறார்கள். இதனால் சாதாரண மக்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. அதுவும் திருப்பதி வெங்கடாசலபதி போன்ற கோயில்களில் சாதாரண தரிசனத்திற்கு குறைந்தது இரண்டு நாட்களாகிறது. அதனால் பக்தர்கள் கட்டணம் செலுத்தி டிக்கெட்களை வாங்கி விரைவாக சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். திருப்பதி வெங்கடாசலபதி கோயில்களில் வி.ஐ.பி. என்ற பெயரில் டிக்கெட் வாங்கி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதற்கு பக்தர்களிடத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் கூட்டம் நேற்று திருமலையில் நடைபெற்றது. அப்போது வி.பி.ஐ. கட்டண முறையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு நேற்றுமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒரே நேரத்தில் நிறைய ஜோடிகளுக்கு திருமணம் நடப்பதை கல்யாணமஸ்து என்று அழைக்கப்பட்டது. இதை இனிமேல் நித்யகல்யாணமஸ்து என்று பெயர் மாற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நித்ய கல்யாணமஸ்து ஆந்திராவில் உள்ள 11 முக்கிய கோயில்களில் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago