Idhayam Matrimony

நடிகை சொர்ணாவை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2012      சினிமா
Image Unavailable

 

தாம்பரம், ஏப்.11 - ​ செக் மோசடி வழக்கில் நடிகை சொர்ணாவை 4 வாரத்தில் கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு குறித்த விபரம் வருமாறு:- அண்ணன் ஒரு கோயில், மூன்று முடிச்சு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சொர்ணா. இவர் மீது செக் மோசடி தொடர்பாக சினிமா பைனான்சியர் போத்ரா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதில், நடிகை சொர்ணாவுக்கு 15 வருடங்களுக்கு முன்பு ரூபாய் 4 லட்சத்து 85 ஆயிரம் கடன் கொடுத்திருந்தேன். அதற்காக நடிகை சொர்ணா கொடுத்த செக் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. அதனால் அவர் மீது மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தேன். 

இதில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.  தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. எனவே நடிகை சொர்ணாவை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் தெரிவித்திருந்தார். 

இந்த வழக்கை நீதிபதி மதிவாணன் விசாரித்து, நடிகை சொர்ணாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நடைமுறைபடுத்த மயிலாப்பூர் போலீசார் 4 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago