முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தாவை விமர்சித்து கார்ட்டூன் பேராசிரியர் உட்பட 2 பேர் கைது

சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, ஏப். - 14 - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கொள்கைகளை விமர்சித்து பேஸ்புக் தளத்தில் கேலி சித்திரங்களை வெளியிட்டதற்காக ஜாதவ்பூர் பல்கலைக் கழக பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா மற்றும் அவரது உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் அம்பிகேஷ். அரசின் கொள்கைகளை விமர்சித்து கேலி சித்திரங்களை போட்டு தள்ளியதுடன் தமது பேஸ்புக் பக்கத்திலும் உலவ விட்டுள்ளார். குறிப்பாக தினேஷ் திரிவேதியை ரயில்வே அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு முகுல்ராயை நியமித்த விவகாரத்தை மையமாக வைத்தே இந்த கேலி சித்திரம் வரையப்பட்டிருந்தது. மொத்தம் 65 பேருக்கு இந்த கேலி சித்திரங்களை பரவ விட்டார் என்பது அம்பிகேஷ் மீதான புகாரில் ஒன்று. இதையடுத்து மம்தா பானர்ஜியை இழிவுபடுத்தி கேலி சித்திரத்தை வரைந்து பரவ விட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார் மம்தா பானர்ஜி.  அம்பிகேஷூடன் அவரது உறவினரான சுப்ரதா சென்குப்தாவையும் போலீஸ் கைது செய்துள்ளது. முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அம்பிகேஷ் வீடு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அம்பிகேஷ், மகாபாத்ராவுக்கு தமது கருத்துக்களை தெரிவிக்க உரிமை இருப்பதால் கேலி சித்திரங்களை வெளியிட்டதில் தவறு இல்லை என்கின்றனர் ஜாதவ்பூர் பல்கலைக் கழக மாணவர்களும், பேராசிரியர்களும். கடந்த சட்டசபை தேர்தலின் போது மேற்கு வங்க மாநில அறிவுஜீவிகள் மம்தாவை ஆதரித்திருந்தனர். ஆனால் அதே சமூகம் மம்தாவின் வெறுப்பேற்றுகிற ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்