முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவனந்தபுரத்தில் ரஜினியின் கோச்சடையான் படப்பிடிப்பு

வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2012      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம், ஏப். - 19 - ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் 3 டி அனிமேசன் கொண்ட கோச்சடையான் படம் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. முற்றிலும் தொழில்நுட்ப வடிவமைப்புடன் கோச்சடையான் தயாராகி வருகிறது. வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது கோச்சடையான் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த குழு திருவனந்தபுரத்தில் முகாமிட்டுள்ளது. மும்பையில் தங்கியுள்ள ரஜினிகாந்த், படிப்பிடிப்புக்காக விரைவில் திருவனந்தபுரம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் நாயகி தீபிகா படுகோனே ஏற்கனவே திருவனந்தபுரத்தில் தங்கியுள்ளார். கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோரும் திருவனந்தபுரத்தில் குவிந்துள்ளனர். தற்போது படத்திற்கான அனிமேஷன் வேலை நடைபெற்று வருகிறது. மேலும் சில தினங்களுக்கு திருவனந்தபுரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறும் என்று தெரிகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்