முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். டி - 20 பெங்களூர் சேலஞ்சர்ஸ் அபார வெற்றி கெய்ல், திவாரி, டிவில்லியர்ஸ் அதிரடி

வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2012      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர், ஏப். - 19  - 5 -வது ஐ.பி.எல். 20 -க்கு 20 போட்டியி ல் பெங்களூரில் நடந்த லீக் ஆட்டத்தி ல் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி பரபரப்பான ஆட்டத்தில் 6 விக் கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிக ஸ்கோரைக் கொண்ட இந்தப் போட்டியில் இரண்டு அணி வீரர்களும் சிறப்பாக பேட்டிங் செய்து தங்களது அதிரடியான ஆட்டத்தால் ரசிகர்களுக் கு விருந்து படைத்தனர்.  இந்தப் போட்டியில் பெங்களூர் அணி தரப்பில், மே.இ.தீவு வீரர் கெய்ல் அதிர டியாக ஆடி அணிக்கு முன்னிலை பெற் றுத் தந்தார். எஸ்.எஸ். திவாரி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் அவருக்கு பக்கபலமாக ஆடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். முன்னதாக பெளலிங்கின் போது, முன் னணி  வேகப் பந்து வீச்சாளரான வினய்குமார் 2 விக்கெட் எடுத்தார். வெட்டோரி மற்றும் வி. படேல் ஆகியோர் அவருக்கு ஆதரவாக பந்து வீசினர்.  ஐ.பி.எல். போட்டியின் 21 -வது லீக் ஆட்டம் பெங்களூரில் உள்ள சின்னசாமி அரங்கத்தில் நடந்தது. இதில் கேப் டன் கங்குலி தலைமையிலான புனே வாரியர்ஸ் அணியும், கேப்டன் வெட்டோரி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த புனே வாரிய ர்ஸ் அணி நன்கு பேட்டிங் செய்து ரன் னைக் குவித்தது. அந்த அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெ ட் இழப்பிற்கு 182 ரன்னை எடுத்தது. இதில் 1 வீரர் அரை சதமும், 2 வீரர்கள் கால் சதமும் அடித்தனர்.  துவக்க வீரராக இறங்கிய ராபின் உத்த ப்பா அமர்க்களமாக பேட்டிங் செய்து 45 பந்தில் 69 ரன்னை எடுத்தார். தவிர, ரைடர் 22 பந்தில் 34 ரன்னையும், சாமு வேல்ஸ் 20 பந்தில் 34 ரன்னையும் , டி. ஸ்மித் 16 ரன்னையும் எடுத்தனர்.  பெங்களூர் அணி சார்பில், வினய் குமார் 34 ரன்னைக் கொடுத்து 2 விக்கெ ட் எடுத்தார். தவிர, வெட்டோரி மற்று ம் வி. படேல் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

பெங்களூர் அணி 183 ரன்னை எடுத்தா ல் வெற்றி பெறலாம் என்ற கடின இல க்கை புனே வாரியர்ஸ் வைத்தது. அடு த்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவ ரில் 4 விக்கெட் இழப்பிற்கு 183 ரன் னை எடுத்தது.  இதனால் இந்த லீக் ஆட்டத்தில் பெங்க ளூர் ராயல் அணி 6 விக்கெட் வித்தியா சத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது.  பெங்களூர் அணி தரப்பில், துவக்க வீர ராக இறங்கிய கெய்ல் அதிரடியாக ஆடி 48 பந்தில் 81 ரன்னை எடுத்து அணிககு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடு த்தார். பின்பு களம் இறங்கிய எஸ். திவாரி(36),  மற்றும் டிவில்லியர்ஸ் (33) இருவரும் அவருக்கு பக்கபலமாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தனர். 

புனே அணி சார்பில், சாமுவேல்ஸ் 5 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத் தார். தவிர, திண்டா, நெக்ரா மற்றும் மேத்யூஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக கெய்ல் தேர்வு செய்யப்ப ட்டார்.

--------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்