திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் தேரோட்டம் பக்தர்கள் சாமிதரிசனம்

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      ஆன்மிகம்
Image Unavailable

திருச்சி. ஏப்.- 21 - சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ரெங்கா... ரெங்கா... என்ற கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். nullலோக வைகுண்டம் எனறு போற்றி புகழப்படும் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் தைத்தேரோடடம், பங்குனி திருவிழா, தெப்பத்திருவிழா, மார்கழியில் வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் வெகுவிமரிசையாக நடக்கும். இந்த நிலையில் மிகவும் விசேசமாக நடக்கும் திருவிழாக்களில் சித்திரை தேரோட்டம் முக்கியமானதாகும். சித்திரை மாதத்தில் நடக்கும் விருப்பன் திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 12ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 23ந்தேதி தங்க கற்பக விருட்ச வாகனம், 15ந்தேதி தங்க கருட வாகனம், நேற்று முன்தினம் தங்ககுதிரை வாகனம் என தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை 3.45 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து திருத்தேருக்கு புறப்பட்டு அதிகாலை 4.15 மணிக்கு, நம்பெருமாள் சித்திரைத்தேர் மண்டபத்தை அடைந்தார். 4.30 மணி முதல் 5.15 மணிக்குள் மீன லக்னத்தில் நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். காலை 6 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேர் 4 வீதிகளிலும் வீதி வலம வந்தது.
அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரெங்கா.... ரெங்கா.... கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர்வீதி வலம் வந்து நிலைக்கு வந்த பிறகு, மற்ற கைக்கரியங்கள் நடந்தது. தொடர்ந்து தேரில் இருந்து நம்பெருமாள் ரேவதி மண்டபம் வந்தார். அதன்பிழகு சேவை தொடங்கியது.
சித்திரை தேரோட்டத்தையொட்டி நேற்று முன்தினம் பகலில் இருந்தே அண்டை மாவட்டங்கள் மற்றும் கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவரங்கம் வந்து சேர்ந்தனர். இரவு வீதிகளில் படுத்து தூங்கினர். அதிகாலையில் கொள்ளிடம், காவிரியில் குளித்து வஇட்டு, சித்திரை தேர் மண்டபம் பகுதிக்கு வந்து தேரோட்டத்தில் கலந்து கொண்டனர். திருவரங்கம் கோவில் சித்திரை தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு அதிகமாக இருந்தது. இதையொட்டி கூட்ட நெரிசலை தவிக்கவும், திருட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கவும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். திருவிழாவையொட்டி பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே nullநீர்மோர் வழங்கப்பட்டது.  பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாநகராட்சி சார்பில் துப்புரவுப்பணி, குடிnullநீர் வசதிகள், செய்யப்பட்டிருந்தன. மொத்தத்தில் திருவரங்கம் நகரமே பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கி விழாக்கோலம் nullண்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: