முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேது சமுத்திர திட்டத்தில் மத்திய அரசு ஊசலாட்டம்

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.22 - சேதுசமுத்திர திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியிருப்பது அதன் அக்கறையற்ற போக்கையும், ஊசலாட்டத்தையுமே வெளிப்படுத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சேது சமுத்திரத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யாமல் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்று சொல்வது திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசின் அக்கறையற்ற போக்கையும், ஊசலாட்டத்தையுமே வெளிப்படுத்துகிறது. இது சேது சமுத்திர திட்டத்தை முடக்க முனைவோருக்கு துணை நிற்கும் செயலாகும். இந்த தவறான நிலைபாட்டை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

எனவே, மதவாத சக்திகளின் சீர்குலைவு நடவடிக்கைகளுக்கு இடம் தராமல், தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெருமளவு உதவிடும் சேது சமுத்திர திட்டத்தை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள வழித்தடத்திலேயே நிறைவேற்றிட உறுதியான நிலையெடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்திய அரசை வலியுறுத்துகிறது. 

இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்