முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனியில் நலத்திட்டங்களை ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      அரசியல்
Image Unavailable

தேனி,ஏப்.22 - தமிழக முதல்வர் ஏழை, எளிய, மக்களுக்கு விலையில்லா மிக்சி,பேன்,கிரைண்டர் வழங்கும் திட்டம் ,பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச மடிகணினி வழங்கும் திட்டம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் ,கிராமப்புற ஏழை பெண்களுக்கு ஆடுகள் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.முதல்வரின் ஆணைக்கிணங்க தேனி மாவட்டத்தில் 13 இடங்களில் 4632 பயனாளிகளுக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இவ்விழா தேனி மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.நலத்திட்ட உதவி வழங்கும் விழா பெரியகுளம் அன்னப்பாக்கியம் மகளிர் கல்லூரியில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ கலந்து கொண்டு 506 மாணவிகளுக்கு ரூ 71.20  இலட்சம் மதிப்பிலான விலையில்லா மடிகணினியை வழங்கினார்.பின்பு தே.வாடிப்பட்டியில் ரூ.2.55 இலட்சம் மதிப்பீட்டில் 20 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளும்,பொம்மிநாயக்கன்பட்டியில் 107 பேர்களுக்கு ரூ.13.64 இலட்சம் மதிப்பீட்டில் விலையில்லா ஆடுகள் வழங்கினார்.பின்பு தேனி வசந்தம் கல்யாண மண்டபத்தில் பெண்கள் பாதுகாப்பு நலத்திட்டத்தின் கீழ் ரூ 15.80 இலட்சம் மதிப்பீல் 104 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.சின்னமனூர் அருகே சின்னஓவுலாபுரத்தில் ரூ.8.93 லட்சம் மதிப்பீட்டில் 70 பயனாளிகளுக்கும்,போடி .அம்மாபட்டியில் ரூ 14.54 இலட்சம் மதிப்பீட்டில் 114 பயனாளிகளுக்கும் ,தருமாபுரியில் ரூ 75.23 இலட்சம் மதிப்பீட்டில் 59 பயனாளிகளுக்கும்,போடி.அணைக்கரைப்பட்டியில் ரூ.11.99 இலட்சம் மதிப்பீட்டில் 94 பயனாளிகளுக்கும் இலவச ஆடுகளை வழங்கினார். மேலும் உத்தமபாளையம் ஹாஜிகருத்தராவுத்தர் கல்லூரியில் ரூ 79.64 இலட்சம் மதிப்பீட்டில் 566 மாணவ,மாணவிகளுக்கு  விலையில்லா மடிக்கணினியும்,போடி சங்கராபுரத்தில் ரூ 57.24 இலட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மின்விசிறி,கிரைண்டர்,மிக்சி,1,060 பயனாளிகளுக்கும்,அம்பாசமுத்திரத்தில் ரூ 23.97 இலட்சம் மதிப்பீட்டில் 444 பயனாளிகளுக்கும்,குப்பிநாயக்கன்பட்டியில் ரூ29.37 இலட்சம் மதிப்பீட்டில் 544 பயனாளிகளுக்கும் ,கோவிந்தநகரத்தில் ரூ50.97 இலட்சம் மதிப்பீட்டில் 944 பயனாளிகளுக்கும் விலையில்லா மின்விசிறி,கிரைண்டர்,மிக்சிகளையும் வழங்கினார்.மொத்தம் தேனி மாவட்டத்தில் 13 இடங்களில் 4,632 பயனாளிகளுக்கும் ரூ.4 1/2 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை நிதி அமைச்சர் வழங்கினார்.இவ்விழாவில் பெரியகுளம் சப்-கலெக்டர் அனிதா, உத்தமபாளையம் சப்-கலெக்டர் கண்ணன்,மாவட்ட செயலாளரும்,கம்பம் நகர்மன்ற தலைவருமான சிவக்குமார்,பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து,மாவட்ட துணைச்செயலாளர் முறுகோடை ராமர்,மாவட்ட பஞ்சாயத்து குழு தலைவர் மகாலிங்கம்,துணைத்தலைவர் ஆண்டி,முன்னாள் எம்.பி.க்கள்,சையதுகான், ராமசாமி,நல்லவேலுச்சாமி,பெரியகுளம் நகரசெயலாளர் ராதா,தண்டபாணி,ரெங்கராஜ்,எல்லப்பட்டி முருகன்,சின்னமனூர் நகர்மன்ற தலைவர் சுரேஷ்,கூடலூர் நகரசெயலாளர் சோலைராஜ்,தேனி நகர செயலாளரும்,நகர்மன்ற தலைவருமான தேனி முருகேசன்,துணை தலைவர் காசிமாயன்,தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அம்சகோமதிவிப்ரநாராயணன்,எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் நாராயணசாமி,அல்லி.விஜயன்,ஈஸ்வரன்,அல்லி.அய்யப்பன்,பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் அப்பாஸ் ,அன்னப்பாக்கியம் கல்லூரி முதல்வர் ,கால்நடை இணை இயக்குனர் சந்திரசேகரன்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜா,உதவி அலுவலர் சண்முகசுந்தரம்,இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கிய 13 இடங்களிலும் ஊராட்சி தலைவர்கள் நிதியமைச்சரை பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்