முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகாரிகள் முடிவை துணிச்சலாக எடுக்க அறிவுரை

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.22 - சிவில் அதிகாரிகள் துணிச்சலாக முடிவு எடுக்க வேண்டும். அதேசமயத்தில் ஊழலை எதிர்த்து போரிடுவதில் எந்தவித ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார். சிவில் சர்வீஸ் தினத்தையொட்டி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் அரசு கொள்கைகளை நிறைவேற்றுவதில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் துணிச்சலாக முடிவு எடுக்க வேண்டும். ஊழலை ஒழிப்பதில் சிவில் அதிகாரிகள் ஒளிவு மறைவு இன்றி செயல்பட வேண்டும் என்றார். தற்போது ஒரு கருத்து நிலவுகிறது. இது தவறோ அல்லது சரியோ என்பது தெரியவில்லை. அதாவது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சிவில் உயரதிகாரிகள் போல் தற்போது இருப்பவர்களிடம் துணிச்சல் இல்லை என்ற கருத்து நிலவுகிறது. மேலும் தற்போதுள்ள உள்ள சிவில் அதிகாரிகள் பல்வேறு வற்புறுத்தலுக்கு அடிபணிகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். இந்த குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? அல்லது இல்லையை என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால் இந்த மாதிரியான கருத்து போக்கப்பட வேண்டும். சிவில் அதிகாரிகள் எடுக்கும் முடிவான நியாயமானதாகவும் குறிக்கோளுடனும் இருக்க வேண்டும். சிவில் அதிகாரிகள் முடிவு எடுக்கும்போது ஏற்படும் தவறு ஏதும் நடந்தால் அது நியாயமான தவறாக இருந்தால் சிவில் அதிகாரிகளுக்கு அரசு பாதுகாப்பு கொடுக்கும் என்றும் மன்மோகன் சிங் கூறினார். சிவில் அதிகாரிகள் துணிச்சலுடன் எடுக்கும் முடிவானது இந்திய சட்டத்தற்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்