முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை மூலம் மதுரையில் மட்டும் ரூ. 3.8 கோடி பறிமுதல்

ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை,மார்ச்.- 27 -வாகன சோதனை மூலம் தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக ரூ. 3.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறுகையில், 

மதுரை மாவட்டத்தில் தமிழகத்தில் வாகன சோதனை மூலமாக இதுவரை ரூ 20 கோடி ரொக்கப் பணமும், நகை உட்பட ரூ 7 கோடி மதிப்புள்ள பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக ரூ 3.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், பொருட்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சோதனைகளின் மூலம் வணிகர்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன. அவர்களிடம் உரிய ஆவணங்கள் இருக்கும்பட்சத்தில் 2 அல்லது 3 நாட்களுக்குள் அவர்களுடைய பணம் திருப்பி அளிக்கப்படுகிறது. சாலைகளில் ஏராளமான வாகனங்கள் செல்லும் போது நம்பகமான தகவல்கள் வரும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாகனங்களில் மட்டுமே சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony