முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபைக்கு புதிய கட்டடம்

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்.25 - தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சினிமா நூற்றாண்டு மாளிகை கட்டடத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று திறந்துவைக்கிறார்.

இந்திய அளவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளை சேர்ந்த திரைப்பட துறையினரின் பல்வேறு பிரிவுகளின் கூட்டமைப்பாக தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை செயல்பட்டு வருகிறது. இதில் சினிமா தொடங்கி இந்தாண்டுடன் நூறு ஆண்டுகள் முடிவடைவதால் வர்த்தக சபை வளாகத்தில் கட்டப்பட்டிருக்கும் புதிய கட்டடத்திற்கு சினிமா நூற்றாண்டு மாளிகை என்று பெயர் வைத்துள்ளனர். திரைப்பட வர்த்தக சபையினர் இந்த கட்டடத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (25.4.12)  காலை 9.30 மணிக்கு வீடியோ காண்பிரன்ஸ் மூலம் திறந்துவைக்கிறார். அதோடு அடுத்த கட்டடப்பட இருக்கும் சினிமா நூற்றாண்டு மாளிகை பாகம் 2 கட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். முதல்வர்

இவ்விழாவில் தென்னிந்திய திரைப்படத்துறையை சார்ந்த முன்னணி இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் என பலர் திரளாக கலந்துக் கொள்கின்றனர். இந்த தகவலை திரைப்பட வர்த்த சபையின் தலைவர் சி.கல்யாண், துணை தலைவர்கள் எம்.பாலசுப்பிரமணியன், எடிட்டர் ஏ.மோகன், பொன் தேவராஜன், தாமஸ் டி.சோஸா, செயலாளர்கள் ரவி கொட்டாரக்கரா,  எல்.சுரேஷ், கே.எஸ்.சீனிவாசன் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!