முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் பா.ஜனதா மாநாடு: அத்வானி நாளை வருகை

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

மதுரை,ஏப்.27 - மதுரை விரகனூர் ரிங்ரோடு பகுதியில் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழக பாரதீய ஜனதாகாட்சியின் தாமரை சங்கமம் என்ற பெயரில் 5-வது மாநில மாநாடு நடைபெறஉள்ளது. மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி மும்முரமார நடைபெற்று வருகிறது. பந்தலின் முகப்பில் பாராளுமன்றம், தமிழக சட்டசபை போன்ற அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வருபவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பந்தலின் முகப்பு அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இங்கு பாரதீய ஜனதா கட்சியின் வரலாறு, ஆளும் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி திட்டங்கள், தலைவர்கள் உள்பட பல புகைப்படங்கள் கண்காட்சியில் இடம்பெறுகிறது.

மாநாட்டின் தொடக்க நாளான நாளை காலை 9 மணி கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நாதஸ்வர கச்சேரியுடன் விழா தொடங்குகிறது. இக்கலைநிகழ்ச்சியில் பரதநாட்டியம், குச்சிபுடி நடனம், செண்டமேளம், களியாட்டம், குதிரை நடனம் உள்பட பாரம்பரிய வளர்ச்சிகள் நடைபெறுகிறது.

இத்தொடக்க விழாவுக்கு மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். மாநில செயலாளர் சுரேந்திரன் வரவேற்கிறார். பாரதீய ஜனதா கட்சியின் மூத்ததலைவரும் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி, அகில இந்திய பா.ஜனதா தலைவர் நிதின்கட்கரி மற்றும் சுஷ்மாசுவராஜ், அருண்ஜெட்லி, இல.கணேசன், செய்திதொடர்பாளர் நிர்மலா சீதா ராமன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

பின்னர் பகல் 1 மணி முதல் முதல் முற்பகல் 2 மணி வரை உணவு இடைவேளையாகும். பிறகு மாலை 4 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதன் பிறகு இரவு 9 மணி வரை மாநாட்டின் 2-வது அமர்வு நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.என்.லட்சுமணன், அகில இந்திய செயற்குழு உறுப்பினர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மாநில அமைப்புபொது செயலாளர் மோகன்ராஜிலு, பொதுசெயலாளர் ரமேஷ் நாகராஜன் ஆகியோர் பேசுகிறார்கள்.

வரும் 29 -ம் தேதி காலையில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சியின் வளர்ச்சி குறித்து பேசப்படுகிறது.

இந்த 2 நாட்கள் நடக்கும் மாநாட்டையொட்டி  மாநாடு நடைபெறும் இடத்திலும், மதுரையின் முக்கிய பகுதிகளிலும் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது. எல்.கே.அத்வானி உள்பட பல தலைவர்கள் மாநாட்டுக்கு வர இருப்பதால் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்மரமாக நடந்து வருகிறது. விமானநிலையத்தில் இருந்து மாநாட்டு பந்தல் வரை பாதுகாப்பு போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்