முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் நகர பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பேன் :ஜெயலலிதா உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

கரூர்,மார்ச்.- 28 - அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி. ஆட்சிக்கு வந்தவுடன் கரூர் நகர பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகாண்பேன் என்று ஜெயலலிதா உறுதி கூறினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று நான்காம்  நாளாக அ.தி.மு.க மற்றும் கூட்டணி  வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். ஜெயலலிதா நேற்று கரூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி அ.தி.மு.க.  வேட்பாளர் செந்தில்நாதன் ஆகியோர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.  கரூரில் உள்ள திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்ற இந்த பிரசாரத்தில் ஜெயலலிதாவுக்கு அமோக வரவேற்பு கொடுக்கப்பட்டது.   வழிநெடுக ஆண்களும், பெண்களும் பெரும் திரளாக கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பிரசாரத்தில் ஜெயலலிதா பேசியதாவது:-  அ.தி.மு.க. மீண்டும்  ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு ரத்து செய்யப்படும், விலைவாசி கட்டுப்படுத்தப்படும். சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும். குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். தாய்மார்களுக்கு 4 கிராம் தங்கத்துடன் திருமண உதவித் திட்டமும் வழங்கப்படும். வீடு இரல்லாதவர்களுக்கு மூன்று சென்ட் இடம் வழங்கப்படும். 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப்கள் வழங்கப்படும், கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2500 வழங்கப்படும். விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் வசதி செய்து கொடுக்கப்படும். தாய்மார்களுக்கு பேன், மிக்ஸி, கிரைண்டர் மூன்றும் இலவசமாக வழங்குவோம். 

இந்த தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான சாதாரண தேர்தல் அல்ல. தமிழக மக்கள் இந்த ஆட்சியில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்பதற்கான தேர்தல். கடந்த 5 ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் விலைவாசி விண்ணைத்தொட்டுவிட்டது. அரிசி கடத்தல், மணல் கொள்ளை, இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட் டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 15 ரூபாய் உயர்ந்து விட்டது. 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி குறையவில்லை. அரிசி விலை 42 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. துவரம்பருப்பின் விலை 90 ரூபாய். புளியின் விலை 110 ரூபாய். ஒரு கிலோ பூண்டு 250 ரூபாயாக உயர்ந்துவிட்டது. தமிழ்நாடு முழுவதும் மணல் கொள்ளை அமோகமாக நடந்துள்ளது. இதன்மூலம் 50 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. 

அதுபோல்கிரானைட் ஊழல் மூலம் 80 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.ஒரு லோடு மணல் விலை ரூ.2500-லிருந்து ரூ.13 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.150-லிருந்து ரூ.280 ஆக உயர்ந்துள்ளது. ஒரு செங்கல்லின் விலை ரூ.3லிருந்து, ரூ.6 ஆக உயர்ந்துள்ளது. மின்வெட்டை தடுக்க முடியாத ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில்  மின் உற்பத்திக்கான எந்தவித திட்டத்தையும் செயல்படுத்தாததால் மின்மிகை நாடு  மின்வெட்டு மாநிலமாக மாறிவிட்டது. 

இதனால் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் உற்பத்தியும் குறைந்துவிட்டது.  ஜவுளித் தொழில் நசிந்துவிட்டது. தமிழக பொருளாதாரம் நசிந்துவிட்டது. இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவிட்டது. தமிழகத்தை ரவுடிக் கும்பல் அடக்கிஆள்கிறது. காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல். எல்லாத் துறைகளிலும் ஊழல் தி.மு.கஆட்சியில் பெருகிவிட்டது.

கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் உள்ள பிரச்சனைகளை நான் நன்கு அறிவேன். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். கரூரில் மணல் கொள்ளையில் ஒரு பெரும் புள்ளி ஈடுபட்டிருப்பது தெரியும். விரைவில் கட்டப்படாத பாலம் கட்டித் தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு கரூர் வந்த அவரை தம்பித்துரை எம்.பி,, செங்கோட்டையன் ஆகியோர் வரவேற்றனர். கரூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஜெயலலிதாவிற்கு பெண்கள் கும்ப மரியாதை அளித்து உற்சாக வரவேற்பளித்தனர். வழிநெடுகிலும் ஜெயலலிதாவிற்கு தாய்மார்கள் பெரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago