முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் ராஜ்ய சபை எம்.பி. ஆகிறார்

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப். 27 - இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் ராஜ்யச பை எம்.பி. ஆக நியமிக்கப்பட இருக்கிறார். காங்கிரஸ் கட்சி சார்பில் அவர் நிறுத்தப்படுகிறார்.  டெண்டுல்கர் நேற்று பிரதமர் மன்மோ கன்சிங்கை சந்தித்தார். அப்போது ரா ஜ்யசபை எம்.பி. பதவி நியமனம் குறி த்து பிரதமர் அவரிடம் வேண்டுகோள் விடுத்தார். சச்சின் இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதாக தெரிய வருகிறது. அவர து பெயர் பிரதமர் அலுவலகத்தில் இருந்து உள்ளாட்சித் துறைக்கு சென்று உள்ளது. 

பின்பு உள்ளாட்சித் துறையில் இருந்து அவரது பெயர் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் அலுவலகத்திற்கு செல்லும். ஜனாதிபதி டெண்டுல்கரை ராஜ்ய சபை எம்.பி.ஆக நியமனம் செய்வார். 

டெல்லி பாராளுமன்றத்தில் உள்ள மே ல் சபையில் 12 இடங்கள் முக்கிய நபர்க ளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.

இந்த நபர்கள் இலக்கியம், கலை , விஞ் ஞானம், மற்றும் சமூக சேவை போன்ற துறைகளில் விசேஷமான அறிவை யோ அல்லது நல்ல அனுபவத்தை யோ பெற்று இருக்க வேண்டும். 

டெண்டுல்கர் மேல் சபை எம்.பி. ஆக நியமிக்கப்படும் பட்சத்தில் விளையாட்டுத் துறையில் இருந்து வந்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார். 

டெண்டுல்கர் எம்.பி. ஆக நியமிக்கப்ப ட்டால் அவர் 6 வருடம் இந்த பதவியி ல் நீடிப்பார். இதற்கு முன்பு இசைமே தை ரவிசங்கர், இந்தி பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மற்றும் பிரபல ஓவி யர் எம். எப்.ஹூசைன் போன்றவர்கள் மேல் சபை எம்.பி.ஆக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

டெண்டுல்கரை மேல் சபை எம்.பி.ஆக நியமிப்பதற்கு அதிக எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சச்சின் பிரப லமான வீரர் என்பதால் அவரது நியம னத்திற்கு வரவேற்பு உள்ளது. 

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது அரசியல் ரீதியாக கடும் நெ ருக்கடி ஏற்பட்டு உள்ளது. இந்நிலையி ல் டெண்டுல்கரை அந்தக் கட்சி ராஜ்ய சபை எம்.பி.ஆக நியமனம் செய்ய இரு க்கிறது. 

பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திப்பத ற்கு முன்பாக டெண்டுல்கர் மற்றும் அஞ்சலி இருவரும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித் தனர். 

அப்போது சச்சின் டெண்டுல்கர் சர்வ தேச கிரிக்கெட் போட்டியில் 100 சதம் அடித்ததற்கு சோனியா வாழ்த்து தெரி வித்ததாக தெரிய வருகிறது. 

டெண்டுல்கர் நியமனம் குறித்து பா.ஜ. க, கட்சித் தலைமை செய்தித் தொடர் பாளரான ரவி சங்கர் பிரசாத் கூறியதா வது - சச்சின் ஒரு பெரிய கிரிக்கெட் வீரர். 

டெண்டுல்கர் குறித்து நாங்கள் பெரு மைப்படுகிறோம். அவர் மேல் சபை எம்.பி.ஆக நியமிக்கப்படும் பட்சத்தில் பாராளுமன்றத்தில் அவர் சிறப்பாக சேவை ஆற்றுவார் என்றார் அவர். 

பி.சி.சி.ஐ.யும் இதற்கு வரவேற்பு தெரி வித்து உள்ளது. விளையாட்டு வீரரான டெண்டுல்கரது சேவைக்கு நல்ல அங்கீ காரம் கிடைத்துள்ளது என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர் வாக அதிகாரியான ரத்னாகர் ஷெட்டி தெரிவித்தார். 

தவிர, இந்தியாவின் நல்ல தூதர் டெண்டுல்கர் தான். இந்தப் பதவி அவருக்கு மேலும் பெருமை சேர்க்கும் என்றும் அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்