முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.யாக நியமனம்: நடிகை ரேகா மகிழ்ச்சி

சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2012      சினிமா
Image Unavailable

மும்பை,ஏப்.29 - ராஜ்யசபை நியமன உறுப்பினராக்கப்பட்டுள்ளதற்கு இந்தி நடிகை ரேகா பெரும் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். ராஜ்யசபை நியமன உறுப்பினர்களாக பிரபல கிரிக்கெட் வீரர் தெண்டுகல்கர், இந்தி நடிகை ரேகா தொழிலதிபர் அனு ஆகா ஆகிய 3 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ராஜ்யசபை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு நடிகை ரேகா மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். நான் மீண்டும் மக்களின் இதயங்களில் இடம்பெற்று அவர்களை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்குவேன். என்னை நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியதுபோல் உங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவேன் என்றும் ரேகா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!