முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிலாரி கிளிண்டன் சீனா புறப்பட்டு சென்றார்

புதன்கிழமை, 2 மே 2012      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன். மே.- 2 - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன்  அரசு முறை பயணமாக சீனா புறப்பட்டு சென்றார். அவர் சீனாவை தவிர மேலும் இரண்டு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும்  இடையே  தற்போது சுமூகமான நட்புறவு இருந்து வருகிறது. இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று சீனா பறப்பட்டு சென்றார். அவருடன் உயர் மட்ட அதிகாரிகள் குழுவும் சீனா புறப்பட்டுள்ளது. சீனா செல்லும் ஹிலாரி கிளிண்டன் அங்கு அந்நாட்டு தலைவர்களுடன் பல்வேறு முக்கியவிஷயங்கள் குறித்து விவாதிப்பார். குறிப்பாக மனித உரிமை பிரச்சினை குஹித்து அவர் விவாதிப்பார். சீனாவில் மக்கள் சுதந்திரமாக செயல்படவும் நடமாடவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சீனாவை அவர் கேட்டுக்கொள்வார். இரு தரப்பு உறவுகள்,பொருளாதார உறவுகள் குறித்து கிளிண்டன் பேச்சு நடத்துவார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கிளிண்டன் தான் சீனாவில் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் குறித்து  பேச இருப்பதாக  தெரிவித்தார். அமெரிக்க - சீன உறவு முக்கியமானது.  ஜனாதிபதிபாரக் ஒபாமாவுக்கும் எனக்கும் மட்டுமல்ல இந்த நட்புறவு  அமெரிக்க மக்களுக்கும் உலக மக்களுக்கும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

 சீனாவுடன் திடமான ,விரிவான, செயலாக்கம் நிறைந்த நட்புறவை ஏற்படுத்த நாங்கள் கடினமாக பாடுபட்டு இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்