என்னை யாரும் சிறை வைக்கவில்லை: மதுரை ஆதீனம்

வெள்ளிக்கிழமை, 4 மே 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,மே.4 - தன்னை யாரும் சிறை வைக்கவில்லை என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.  மதுரை இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதில் பெரும் சர்ச்சை கிளம்பியது. தருமபுர ஆதீனம் உள்பட பல்வேறு ஆதீன கர்த்தர்கள் நித்தியானந்தா நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இதை வாபஸ் பெறாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தனர். இதற்கு மதுரை ஆதீனம், இளைய ஆதீனம் நித்தியானந்தா ஆகியோர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இந்த நிலையில் மதுரை ஆதீனம் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஒரு சிலர் தவறான தகவல்களை பரப்புவதற்காக கோர்ட்டில் ஆட்கொணர்வு வழக்கு தாக்கல் செய்துள்ளனர். என்னை சிறையில் வைத்துள்ளதாகவும், போதை ஊசி போட்டதாகவும் தவறான வதந்தியை கிழப்புகிறார்கள். என்னை நித்தியானந்தாவோ, அவரை சார்ந்தவர்களோ சிறை வைக்கவில்லை. எனது வழக்கம் போல பணியை செய்து வருகிறேன். கோர்ட், போலீஸ் படிகளில் இதுவரை ஆதீனங்கள் ஏறியது இல்லை. ஏறவும் கூடாது. நானும் எதற்காகவோ கோர்ட்டுக்கோ, போலீஸ் நிலையத்திற்கோ செல்லமாட்டேன். தேவைப்படும் பட்சத்தில் நீதிபதிகள் இங்கு வந்து என்னை சந்திக்கலாம். நான் இங்குதான் இருக்கிறேன்.

  இப்போது கிளப்பப்படும் எதிர்ப்புகள் விரைவில் நீங்கிவிடும். நித்தியானந்தா பதவி பிரமாணத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவர் இளைய ஆதீனமாக இருந்து மதுரை ஆதீனத்தின் பெருமைகளை உலக எடுத்து செல்ல வேண்டுமென்பது தான் நமது விருப்பும. இவ்வாறு அவர் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: