முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி கோவில் தேரோட்டம்: பக்தர்கள் திரண்டனர்

வெள்ளிக்கிழமை, 4 மே 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,மே 4 -  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசித்தனர்.   மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாக்களில் முக்கியமானது சித்திரை திருவிழாவாகும். அதிலும் மீனாட்சி சந்தரேசுவரர் திருக்கல்யாணம் உலக பிரசித்தி பெற்றதாகும். மீனாட்சி அம்மன்கோவில் சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. தினமும் பல்வேறு வாகனங்களில் மீனாட்சியும், சுந்தரேசுவரர் -ப்ரியாவிடையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி பட்டாபிஷேகம் 30ம் தேதி இரவு நடைபெற்றது. 

 திருவிழாவின் 10ம் நாளான நேற்று மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வடக்காடிவீதியில் மலர்களால் அமைக்கப்பட்டுள்ள மணமேடையில் காலை 9.17 மணிமுதல் 9.41 மணிக்குள் மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.திருவிழாவின் 11ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. காலை 5.30மணிக்கு மீனாட்சி அம்மன்திடலுக்கு அழைத்துவரப்பட்டு  பட்டு துணிகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினார். இதை தொடர்ந்து சுந்தரேசுவரர்- பிரியாவிடை பெரிய தேரிலும் எழுந்தருளினர். பின்னர் காலை 6மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க பெரிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதன் பின்பு மீனாட்சி தேர் புறப்பட்டு வந்தது. தேர் திருவிழாவில் மதுரை மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து வந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மீனாட்சியையும், சுந்தரேசுவரரையும் வணங்கினர். தேர் 4 மாசி வீதிகளிலும் வலம் வந்து சரியாக 12 மணிக்கு நிலை வந்தடைந்தது.

    இந்த தேரோட்ட விழாவில் கடந்த ஆண்டை விட அதிகம் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் தேரை வேகமாக இழுக்க முடியாமல் தேர் வந்தடைய தாமதமானது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்