முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.மு. கூட்டணி அரசு பல சாதனைகளை செய்திருக்கிறது!

புதன்கிழமை, 23 மே 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மே.24  - இன்னமும் நிறைவேறாத பணிகள் இருப்பதாக பிரதமர் மன்மோகன்சிங் கவலை தெரிவித்தார். மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2 வது முறையாக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி பிரதமர் மன்மோகன்சிங் தனது இல்லத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு இரவு விருந்தளித்தார். அப்போது அவர் அரசின் செயல்பாடுகளை மதிப்பிடும் பட்டியல் தொகுப்பை வெளியிட்டு பேசுகையில்,
நாட்டில் ஏராளமான திட்டங்களை இன்னமும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். இது தொடர்பாக ஆக்கபூர்வமான விவாதம் தேவை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு முந்தைய அரசுடன் ஒப்பிடும் போது நாட்டில் நிலவும் வறுமை சரிந்து வந்துள்ளது. சர்வதேச அளவில் உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியை சந்தித்த போது உலகின் 2 வது மிகப் பெரிய நாடாக இந்தியா விளங்கி வருகிறது. அதன் வளர்ச்சி விகிதம் தற்போது 7 சதவீதமாக இருக்கிறது.
கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பலன் பெறும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்தி செய்யும் தானியங்களுக்கு உரிய தொகை அளிக்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க சாதனையாக உணவு தானியங்களின் உற்பத்தி இந்த ஆண்டு 25 கோடி டன்களை எட்டியுள்ளது. தேசிய அளவில் உள்நாட்டு பாதுகாப்பு திருப்திகரமாக உள்ளது. ஆனால் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் கவலை தருகிறது. பயங்கரவாதத்தை ஒடுக்க மாநில அரசுகளின் ஒத்துழைப்பு அவசியம்.
ஊழலை ஒழிக்கும் பணியில் மத்திய அரசு தீவிர முனைப்பு காட்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல சாதனைகளை செய்திருப்பதாக பெருமிதம் கொள்கிறோம். ஆனால் இன்னமும் நிறைவேறாத பல பணிகள் உள்ளன. அவற்றை வரும் நாட்களில் உறுதியுடன் செய்து முடிக்க வேண்டும். அந்த முயற்சியில் புதிய உத்வேகத்துடன் மத்திய அரசு செயல்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்