முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய பாதுகாப்பு பணிக்குழு பிரதமரிடம் அறிக்கை தாக்கல்

வெள்ளிக்கிழமை, 25 மே 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மே. 25 - தேசிய பாதுகாப்பு முறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட பணிக்குழுவானது தனது அறிக்கையை நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தாக்கல் செய்தது. இந்த பணிக்குழு கடந்த 2011 ம் ஆண்டு ஜூலை மாதம் அரசால் அமைக்கப்பட்டது. இதன் தலைவராக நரேஷ் சந்திரா இருந்து வருகிறார். இதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், முன்னாள் ஆயுதப்படை அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு நிபுணர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் தேசிய பாதுகாப்பு முறையில் உள்ள பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் இவற்றை ஆய்வு செய்தனர். தேசிய பாதுகாப்பை எப்படி வலுப்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் என்ன? என்பதையும் இவர்கள் யோசனைகளாக கூறியிருக்கிறார்கள். இவர்களது அறிக்கை நேற்று பிரதமரிடம் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த குழுவினர் நிதியமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர், உள்துறை அமைச்சர், திட்ட கமிஷன் துணை தலைவர், முப்படை தளபதிகள் ஆகியோரையும் சந்தித்தனர். இந்த அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் கூறப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்