முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 கல்யாணம்: மணப்பெண்ணை தேடிய மணமகன்கள்

வியாழக்கிழமை, 24 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

கடலூர், மே. 24 - வைணவ திருத்தலங்களில் நடுநாட்டு திருப்பதியாக போற்றப்படுகிறது கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் கோயில். திருமணம், வேலைவாய்ப்பு, உடல் நலம், மன அமைதி, குடும்ப ஒற்றுமை, செல்வ நிலை இப்படி பல நேர்த்திக்கடன்களை முன் வைத்து பக்தர்கள் இக்கோயிலில் வேண்டிக் கொள்வர். கடந்த ஆண்டு எந்த கோயிலிலும் இல்லாத அளவுக்கு இந்த கோயிலில் 4,800 திருமணங்கள் நடந்தன. 

நேற்று முகூர்த்த தினம் என்பதால் முகூர்த்த நேரமான 6 - 7.30 மணியில் அத்தனை மணமக்களும், அவர்களின் உறவினர்களும் கோயில் மண்டபத்தில் நுழைந்தனர். இதனால் கடும் நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் அனைவரும் உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதற்கிடையே புரோகிதர்கள் மட்டுமே இருந்ததால் திருமணத்துக்கு புரோகிதர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. புரோகிதர்கள் கிடைக்காதவர்கள் தாங்களே தூண் அருகில் நின்று பெற்றோர் உதவியுடன் தாலியை எடுத்து மணப்பெண்ணின் கழுத்தில் கட்டினர். மணமக்கள் அனைவரும் கூரை புடவை அணிந்திருந்ததால் மாப்பிள்ளைகளுக்கு தங்களின் மணப் பெண்ணை கண்டுபிடிப்பதில் சிக்கலும் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்க ஹயக்ரீவர் மலையில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை திறக்க இந்து அறநிலையத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!