முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னி போனது... ஆனால்! மண்டையை பொளக்கும் வெயில்

புதன்கிழமை, 30 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே. 30 - சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த கத்திரி வெயில் நேற்றோடு விடை பெற்றுவிட்டது. சென்னை நகரில் 100 டிகிரியைத் தாண்டி வெயிலின் உக்கிரம் உச்சமாக இருந்து வந்த நிலைமை தற்போது இல்லை. என்றாலும் வெயிலின் தாக்கம் மண்டையை பிளக்கும் வகையில் இருந்து வருகிறது.  கோடையின் உச்சக்கட்டம் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் (கத்திரி வெயில்) கடந்த 4-ந் தேதி தொடங்கியது. நாள்தோறும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் 100 டிகிரிக்கும் குறையாத வெயில்தான்! சுள்ளென்று மண்டையை ஒருமாதமாக பிளந்துவந்தது அக்னி வெயில்! அதிகபட்சமாக 112 டிகிரி வரைக்கும் அக்னி தனது உக்கிர தாண்டவத்தை வெளிப்படுத்தியும் இருந்தது!

கோடை மழையால் சில பகுதிகள் ஆறுதலடைந்த போதும் அக்னிக்கு எந்த பகுதியும் தப்பவில்லை. அக்னி முடிவடைந்துவிட்ட நிலையில் இன்னும் சில நாட்களுக்கு வெப்பம் நீடிக்க வாய்ப்பிருக்கிறது என்றே கூறப்படுகிறது. சென்னைய்ல் நேற்று 109 டிகிரி வெயில் பதிவானது. வேலூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியைத் தாண்டியே இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்