முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகாசி விழா: திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூன் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருச்செந்தூர், ஜூன்.3 - திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்று. வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.

வைகாசி விசாக திருநாளான இன்று (ஞாயிறு) அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகத்தை தொடர்ந்து காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும். நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறப்பு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

திருவிழாவையொட்டி கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் கடைபிடித்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சுவாமி தரிசனம் செய்கிறார்கள்.

நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுவாமிதுரை வேலு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ்டுபட்டு வருகின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் அர.சுதர்சன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்